For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்நீச்சல் குணசேகரின் ஆரம்ப கால வாழ்க்கை இவ்வளவு போராட்டம் ஆனதா... வாழ்க்கையை மாற்றிய தருணம்..!!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிக்கும் மாரிமுத்துவின் ஆரம்ப காலம் பல சோதனைகள் நிறைந்ததாக இருந்துள்ளது என்று கூறியிருக்கிறார்.

படிப்பில் கெட்டிக்காரராக இருந்த மாரிமுத்து திரைத்துறைக்கு வர காரணம் முதல் மரியாதை திரைப்படம் தானாம்.

அவருடைய ஊரிலேயே யாரும் அதிகமாக படிக்காத நேரத்திலும் இவர் பல மயில் தூரம் நடந்து சென்று கடினமாக படித்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் கல்லூரி படிப்பை முடிவடைந்ததும் திரைத்துறைக்கு காலடி எடுத்து வைத்துள்ளார்.

சன் டிவி சீரியலில் அறிமுகமாகும் பாவனி, அமீர்..!!??இது என்ன திடீர் ட்விஸ்ட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்சன் டிவி சீரியலில் அறிமுகமாகும் பாவனி, அமீர்..!!??இது என்ன திடீர் ட்விஸ்ட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கிராமத்து வாழ்க்கை

கிராமத்து வாழ்க்கை

இப்போது பலர் நல்ல நிலைமையில் இருந்து வந்தாலும் அவர்களுடைய ஆரம்ப காலம் வலி மிகுந்ததாகவும், கஷ்டங்கள் நிறைந்ததாகவும் தான் இருக்கும்.கஷ்டங்கள் எவ்வளவு அனுபவிக்கிறார்களோ அதோடு உழைப்பும் இருக்கும் நிலையில் தான் அவர்கள் முன்னேற்றத்தில் அடைய முடியும் என்பது பலருடைய வாழ்க்கையில் கண்கூடாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வரும் மாரிமுத்து தன்னுடைய சுய வாழ்க்கையிலும் பல கஷ்டங்களை சந்தித்து தான் வாழ்க்கையில் முன்னேற்றங்களை அடைந்திருக்கிறாராம். தேனியின் அருகில் உள்ள 20 வீடுகள் மட்டுமே இருக்கும் சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்து தன்னுடைய கஷ்டமான உழைப்பினால் இன்று இந்த நல்ல நிலையில் இருப்பதாக கூறி இருக்கிறார்.

திருப்பம் தந்த முதல் மரியாதை

திருப்பம் தந்த முதல் மரியாதை

மாரிமுத்துவின் சொந்த ஊரான பசுமலைத்தேறி கிராமத்தில் அதிகமாக யாரும் படித்தது கிடையாதாம். காரணம் அருகில் பள்ளிகள் எதுவும் இல்லாததாலும், வீட்டில் கஷ்டம் இருப்பதாலும் பாதியிலே படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்தின் ஏழ்மையை நீக்குவதற்காக விவசாயம், தொழில் என பலரும் திசை மாறி விடுகிறார்களாம். அந்த காலகட்டத்தில் மாரிமுத்துவுக்கு படிப்பில் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது பள்ளி படிப்பை முடித்து இருக்கிறார். காலேஜ் படிப்பதற்காக சிவகாசிக்கு வந்து இருந்த நேரத்தில்தான் அவர் தனக்குள் இருக்கும் திறமையை புரிந்து கொள்ள முடிந்தது என்று கூறியிருக்கிறார். காலேஜ் படிக்கும் போது விருதுநகரில் முதல் முறையாக முதல் மரியாதை திரைப்படம் பார்த்திருக்கிறார். பார்த்ததும் இவருக்கு அதிகமாக பிடித்து விட்டதாம். அப்போது வெளியே வந்து மீண்டும் டிக்கெட் எடுத்து அதே திரைப்படத்தை அடுத்த சுற்றில் பார்த்து இருக்கிறார்.

உதவி இயக்குனராக அறிமுகம்

உதவி இயக்குனராக அறிமுகம்

காலேஜ் படித்து முடித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த மாரிமுத்துவிற்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது முதல் மரியாதை திரைப்படம் தான் என்று கூறி இருக்கிறார். முதல் மரியாதை திரைப்படத்தை பார்த்ததும் அதில் உள்ள நடிப்பு, பாடல்கள், இசை மட்டும்தான் இவருடைய மண்டைக்குள் அடிக்கடி ஓடிக்கொண்டே இருந்ததாம். அதனால் காலேஜ் படித்து முடித்ததும் பல போராட்டங்களுக்குப் பிறகு பல எதிர்ப்புகளையும், இவரை நம்பி இருந்தவர்களுக்கு ஏமாற்றங்களையும் கொடுத்துக் கொண்டுதான் சென்னைக்கு வந்து இருக்கிறாராம். ஆரம்பத்தில் இவர் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் இருந்துள்ளார்.

நடிப்பிலும் கெட்டிக்காரர்

நடிப்பிலும் கெட்டிக்காரர்

ஆரம்பத்தில் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருந்தவருக்கு ஹோட்டலில் தான் வேலை கிடைத்திருக்கிறது. அப்போது வைரமுத்துவின் இலக்கிய ஆர்வத்தின் மூலமாக அவருடன் பழகி இருக்கிறார். ராஜ்கிரணுடன் அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களுக்கு உதவி இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ் ஜே சூர்யா போன்ற தயாரிப்பாளர்களுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். கண்ணும் கண்ணும், புலிவால் என இரண்டு திரைப்படங்களை இயக்கவும் செய்துள்ளார். புலிவால் திரைப்படத்திற்கு பிறகு இவர் எந்தப் படங்களையும் இயக்க வில்லையாம். பல திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் தற்போது எதிர்நீச்சல் சீரியலிலும் இவர் நடித்து வருகிறார். இவர் யுத்தம் செய் படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகம் ஆகி தனக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

English summary
Marimuthu, who plays the role of Gunasekaran in Sun TV's ethir neechal serial, has said that his early days were full of trials. Marimuthu, who was good at studies, came to the film industry because of the first respect movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X