சன் டிவி சீரியலில் அறிமுகமாகும் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா... இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சென்னை: வெள்ளித்திரையில் ஒரு காலத்தில் நம்பர் ஒன் இடத்தில் வலம் வந்துகொண்டிருந்த நடிகை தற்போது சன் டிவி சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார்.
சன் டிவி சீரியல் தற்போது டிஆர்பி அதிகரிப்பதற்காக கையாண்டிருக்கும் விதம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இது வரைக்கும் இல்லாத வகையில் கே ஆர் விஜயா முதல்முறையாக சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார்.

எதிர்பார்க்காத சீரியல் என்ட்ரி
பல ரசிகர்கள் தங்களுடைய அம்மாவின் பெயரை கூட இன்சியலோடு சொல்ல மாட்டார்கள் ஆனால் நடிகையின் பெயரை கே ஆர் விஜயா என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு மரியாதை பெற்றிருந்த இவர் தற்போது சீரியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஒருகாலத்தில் சினிமாவில் பட்டிதொட்டியெல்லாம் கலக்கி நடிகர்களுக்கு இணையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்போது சீரியலில் அறிமுகமாக இருக்கிறார். இது இவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

மீண்டும் தொடங்கிய சினிமா பயணம்
பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கும் இவர் எந்த நேரத்திலும் தான் சுறுசுறுப்பாக தான் இருக்கிறேன் என்றும் தன் நடிப்பின் ஆசையும் திறமையும் தன்னை விட்டு போகவில்லை என்பதை தற்போது இவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய உடம்பிற்கு தான் வயது ஆகி இருக்கிறதே தவிர மனதிற்கு ஆகவில்லை என இவர் தன்னம்பிக்கையோடு மீண்டும் சினிமாக்களில் கலக்க ஆரம்பித்து விட்டார். தற்போது சினிமாக்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் உடனே ஓகே சொல்லி விடுகின்றனர். அதுபோலத்தான் இவரும் செய்திருக்கிறார்.

வரவேற்கும் ரசிகர்கள்
பழம்பெரும் நடிகை என்று சொன்னதும் ஒரு சில நடிகைகளின் முகம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும் அதில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் தொடங்கி அதற்கு பிறகு நடித்த நடிகர்களுடனும் கௌரவ தோற்றத்தில் களைகட்டி இருக்கிறார். ஆனால் அதிகமாக சிவாஜியுடன் இவர் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவர் அம்மாவாகவும், அக்காவும் கூட இளம் தலைமுறை நடிகர்களுடன் நடித்து கொண்டிருந்தார். ஆனால் சமீபகாலமாக இவர் சினிமா பக்கம் வராமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் இவர் மீண்டும் சீரியலில் வருகிறார் என்று தெரிந்ததும் இவருடைய ரசிகர்கள் இவரை வரவேற்று கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.

குவியும் ரசிகர்களின் வாழ்த்து
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பலவும் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுவிடும். அதுவும் இளைஞர்களையும் பெரியவர்களையும் கவர்ந்து இழுக்கும் ஒரு சில சீரியல்கள் தான் இருந்து வருகிறது. அதில் அன்பே வா என்னும் சீரியலில் கதாநாயகனுக்கு தற்போது ஆக்சிடென்ட் நடந்து இருப்பது போலவும், அதனால் கதாநாயகி கோவிலில் சென்று சாமியிடம் முறையிட்டு வேதனையோடு கையெடுத்து கும்பிடும் போது சாமியாக கேஆர்விஜயா என்ட்ரி கொடுக்கிறார். இதை பார்த்ததும் அப்படியே பழைய படத்தை பார்ப்பது போல இருக்கிறது என்றும் இதுவரை பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications