பாசத்தை பதுங்கி காட்டிய கலா மாஸ்டர்.. திகைப்பில் மீனா.. வேற லெவலில் உணர்ச்சி பூர்வமான வார்த்தைகள்
சென்னை: மீனாவின் பிறந்தநாளையொட்டி மீனாவின் நெருங்கிய நண்பரும் தோழியுமான பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் மற்றும் மீனாவின் திரையுலக தோழிகள் இணைந்து கொடுத்துள்ள இன்ப அதிர்ச்சி வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை மீனாவின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
மீனாவின் கணவர் இறந்த சில நாட்களே ஆன நிலையில் அவருக்கு அந்த சோகம் தெரியாதவாறு பிறந்த நாளை கொண்டாட மீனாவின் சக தோழிகள் செய்த செயலை பலர் பாராட்டி வருவதோடு மீனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

கண்ணழகி மீனா
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானாலும் ஹீரோயினாக ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை மீனா. மீனா கதாநாயகியாக நடித்த காலத்தில் அவர் ஜோடி சேராத ஹீரோக்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஹீரோக்களே வாண்டடாக தங்கள் படத்தில் மீனாவை கதாநாயகியாக ஓப்பந்தம் செய்ய சொல்லி இயக்குனரிடம் கேட்கும் அளவிற்கு தமிழ் ரசிகர்களை தன் கண்ணாலே கவந்து வைத்திருந்தார்.சரியான காலகட்டத்தில் திருமணம் முடித்து செட்டில் ஆனார்.

வாழ்க்கையில் வீசிய திடீர் புயல்
திருமணத்திற்கு பின்பும் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார் மீனா. பின்னர் மீனாவின் மகள் நைனிகாவும் விஜயின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நன்றாக சென்று கொண்டிருந்த மீனா வாழ்க்கையில் யார் கண் பட்டதோ மீனாவின் கணவர் திடீரென உடல் நலக்குறைவால் இறந்த செய்தி மீனாவை மட்டுமல்ல மொத்த திரையுலகையுமே அதிர்ச்சி குள்ளாக்கியது.அந்த நேரத்தில் தமிழ் திரை உலகின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் மீனாவின் கணவர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதோடு மீனாவிற்கு தங்கள் அனுதாபங்களையும் தெரிவித்து இருந்தனர்.

பிறந்தநாள் கொண்டாடிய தோழிகள்
குழந்தை நட்சத்திரமாக இருந்து திரையுலகில் இருப்பதால் மீனாவிற்கு பெரிய அளவில் நட்பு வட்டாரங்கள் திரையுலகில் உள்ளது. பிரபல இயக்குனர் ஹரியின் மனைவி பிரீத்தா ஹரி மற்றும் நடிகை சங்கீதா மற்றும் சகத் தோழிகள் இணைந்து மீனாவின் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், மீனா தன்னுடைய தோழி மட்டும் இல்லை சகோதரி என்று சொல்லும் அளவிற்கு பாசப்பினைப்பில் இருக்கும் கலா மாஸ்டர் மீனாவின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ள வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கலா மாஸ்டர் சர்ப்ரைஸ்
மீனாவின் கணவர் இறந்த சமயத்தில் ஆரம்பத்தில் இருந்து அவரது இறுதிச் சடங்கு மற்றும் அனைத்திலும் முன்னின்று மீனாவிற்கு துணையாக நின்றவர் கலா மாஸ்டர். மீனா தன்னுடைய சகோதரி போன்றவர் என்றும் அவருடைய இந்த நிலைமையை தன்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாகவும் மிகவும் கண்கலங்கி மீடியாக்கள் முன் பேசியவர் கலா மாஸ்டர். மீனாவின் மீது பெரும் அக்கறை கொண்ட கலா மாஸ்டர் மீனாவின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததை வீடியோவாக வெளியிட்டு"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மீனா!! வேறொரு தாயிடமிருந்து கிடைத்த சகோதரி. நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆச்சரியத்தை நீங்கள் ரசித்தீர்கள் என்று நம்புகிறேன். லவ் யூ நிலவே. நம் பிணைப்பை என்றென்றும் போற்றுவோம். என்று தனது வாழ்த்து செய்தியை பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications