பணப் பையோடு வெளியே வந்த கதிரவன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பு.. இதுதான் காரணமாம்! இப்படி சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறிய கதிரவன் இன்று ரசிகர்களிடம் முதல் முறையாக மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

முதல் முறையாக வந்த பண முட்டையில் மூன்று லட்சம் மட்டுமே இருந்த நிலையில் அதை உடனே கதிரவன் எடுத்துவிட்டார்.

கடைசி நாள் வரைக்கும் கதிரவன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பார் என்று அவருக்கு ஓட்டு அளித்து ஆதரவு தெரிவித்து வந்த ரசிகர்களுக்கு கதிரவனின் செயல் வருத்தத்தை கொடுத்திருக்கிறதாம்.

பண மூட்டை டாஸ்க்

பண மூட்டை டாஸ்க்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 101 வது நாள் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிலையில் ரசிகர்கள் பணப்பெட்டி டாஸ்க்காக ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த நிலையில் நேற்று பணம் மூட்டை டாஸ்க் வந்தது. இதில் ஆரம்பத்தில் மூன்று லட்சம் மட்டுமே பணம் இருந்தது. ஏற்கனவே கடந்த வாரம் முழுக்க உள்ளே இருந்து ஆறு போட்டியாளர்களின் குழப்பும் வகையில் சிறப்பு விருந்தினர்கள் வந்து போட்டியாளர்களின் நெகட்டிவ் கருத்துக்களை மட்டுமே பேசி அனைவருடைய தன்னம்பிக்கையிலும் ஆட்டம் காண வைத்துவிட்டு சென்றிருந்தனர்.

கதிரின் மனநிலை

கதிரின் மனநிலை

இந்த நிலையில் நேற்று கதிரவன் பண மூட்டை டாஸ்க் வந்ததும் உடனே அதை தூக்கி விட்டார். அதை குறித்து உள்ளே இருந்த ரச்சிதா தனலட்சுமி போன்றோர் எவ்வளவோ தடுத்தும் கதிரவன் கேட்கவில்லை மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கதிரவன் பணம் மூட்டையை தூக்கியதும் அதை குறித்து பெரிய அளவில் எந்த வருத்தத்தை படவில்லை என்றாலும் ஷிவின் கதிர் உடைய இந்த எதிர்பாராத செயலால் முகமே மாறிப் போய்விட்டது. ஆனால் கதிரவன் எனக்கு இந்த மூன்று லட்சம் போதும் என்று பணமூட்டையோடு அனைவரிடமும் விடை பெற்று விட்டு இரவோடு இரவாக வெளியேறிவிட்டார்.

முதல் வீடியோ

முதல் வீடியோ

இந்த நிலையில் கதிர் உடைய செயல் அவருடைய ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெரும் ஒரு செயலாகத்தான் இருக்கிறது. காரணம் கடைசி கட்டத்தில் இருந்த ஆறு போட்டியாளர்களில் விஜே கதிரவனுக்கு குறைவான வாக்குகள் தான் இருந்தது. ஏற்கனவே கதிரவன் ஒவ்வொரு முறையும் அவருடைய ரசிகர்களால் தான் காப்பாற்றப்பட்டு கடைசி இடத்திற்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு கதிரவன் முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு இதுவரைக்கும் வாக்கு செலுத்தி ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பு

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பு

அது மட்டும் அல்லாமல் ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். காரணம் நான் பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியே வருவேன் என்று பலரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள். அதுமட்டுமல்லாமல் எனக்கு இந்த வீடியோ எடுக்கும் போது ரொம்ப ஷாக்காக இருக்கிறது. காரணம் அவ்வளவு பெரிய வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த பிறகு என்னுடைய வீடு எனக்கு ரொம்பவே சிறுசாக இருக்கிறது. உள்ளே இருக்கும்போது நான் எல்லோரையும் என்டர்டைன்மென்ட் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன். அதனால் உள்ளே இருக்கும்போது என்னை எல்லோரும் ரசித்திருப்பீர்கள் அதுமட்டுமில்லாமல் நிறைய முகம் சுளிக்கிற மாதிரி சில விஷயங்களையும் நான் செய்து இருக்கிறேன். அதையும் நீங்கள மன்னிச்சி என்னை ரசித்து இருக்கீங்க அதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு அதை கொஞ்ச நாள் கழித்து கூறுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+