அய்யனார் துணை அப்டேட்: சேரன் குடும்பத்தை பிரிக்க வானதி போட்ட பிளான்.. செக் வைத்த பாண்டியன்! நிலா பாவம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Ayyanar Thunai serial today episode) அய்யனார் துணை சீரியலில் 2026 பிப்ரவரி 23ஆம் தேதிக்கான எபிசோடில், வானதி மற்றும் பாண்டியன் இருவருக்கும் கல்யாணம் நடத்தி வைக்க வானதியின் குடும்பத்தில் சம்மதம் கிடைத்திருக்கிறது. ஆனால் வானதி சொன்ன பிளான் கேட்டு பாண்டியன் இந்த கல்யாணத்தை மறுக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலில் வானதி - பாண்டி கல்யாணத்தை வைத்து புதிய திருப்பம் வந்திருக்கிறது. கடந்த வாரம் முழுவதும் உயிலைத் தேடி வீட்டை மீட்ட அய்யனார் துணை குடும்பம் மீண்டும் வீட்டுக்குள் மாஸ் என்ட்ரி கொடுத்து, வந்த உடனே பொங்கல் பண்டிகையையும் கொண்டாடினர். ஆனால் அந்த சந்தோஷமான சூழ்நிலையில் வானதி எடுத்த முடிவு குடும்பத்துக்குள் புதிய பிரச்சனையை உருவாக்கும் வகையில் அமைந்தது.

அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு
அய்யனார் துணை சீரியலில் இன்றைய எபிசோடின் (Ayyanar Thunai Serial Feb 23 Episode) ஆரம்பத்தில், தன் காதலன் பாண்டியுடன் பொங்கல் கொண்டாட காலையிலேயே வீட்டுக்கு வந்த வானதி, தன் வீட்டில் இருவரின் திருமணத்துக்கும் சம்மதம் கிடைத்துவிட்டதாக கூறி, முறைப்படி பெண் கேட்க வருமாறு பாண்டியிடம் சொல்லுகிறார்.
கல்யாணத்திற்கு சம்மதம்
அதற்கு பாண்டியன் இப்போ நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா செட் ஆகுமா? ஏற்கனவே சேரன் அண்ணன் இன்னும் கல்யாணம் முடியாமல் இருக்கிறார் என்று சொல்ல, அதற்கு வானதி அவருக்கு பொண்ணு ரெடியா தானே இருக்கு, இப்ப விட்டா எங்க வீட்டில் மனசை மாத்திக்குவாங்க என்று சொல்கிறார். அதற்கு பாண்டியன் தற்போது வீட்டில் இட வசதி இல்லாததால் திருமணம் செய்ய முடியாது என்று பாண்டி மறுக்கிறார்.
வானதியின் பிளான்
அதற்கு வானதி, நிலா டூப்ளிகேட் கல்யாணம் செய்து தனி ரூமில் தங்கி இருப்பதாக கூறி, நமக்கு கல்யாணம் ஆனதும் அவரை வெளியே அனுப்பிவிட்டு அந்த ரூமில் நாம இருவரும் தங்கலாம் என்று சொல்லுகிறார். இதனால் குடும்பத்தில் பிரிவு ஏற்படும் என பாண்டி பயப்படுகிறார்.
பின்னர் வானதி நேரடியாக சேரனிடம் பேசி, தன் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் கிடைத்துவிட்டதாகவும், மறுநாள் சாயங்காலம் பெண் கேட்க வருமாறும் கூறுகிறார். இதைத்தொடர்ந்து அடுத்த நாள் வானதி வீட்டில் மாப்பிள்ளை வீட்டார் வருவார்கள் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
காத்திருக்கும் வானதி குடும்பம்
5.30 மணி முதல் 6 மணி வரை நல்ல நேரம் இருப்பதாக வானதியின் தாய்மாமா கூற, அதற்குள் வருவார்கள் என வானதி நம்பிக்கையுடன் தயாராகிறார். நேரம் கடந்து செல்லும் போது வானதியின் அண்ணன் அவர்கள் வரமாட்டார்கள், இவளை ஏமாற்றிவிட நினைத்திருப்பார்கள் என சொல்ல, அதற்கு கடுப்பான வானதி பாண்டி அப்படிப்பட்டவன் இல்லை என்று பதிலளிக்கிறார்.
உடனே சேரனுக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது சேரன் தாங்கள் இன்னும் வீட்டிலேயே இருப்பதாக சொல்ல வானதி அதிர்ச்சி அடைகிறார்.. இன்னும் கிளம்பவே இல்லையா, எப்போது வருவீங்க என்று அவர் கேட்கிறார். அதற்கு பாண்டி வந்ததும் கிளம்பி வருவோம் என்று சேரன் சொல்கிறார்.
குழப்பத்தில் பாண்டியன்
ஆனால் அந்த நேரத்தில் பாண்டி வானதி வீட்டுக்கு செல்லாமல் தனியாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்போது கல்யாணம் செய்தால் நிலாவை ரூமை விட்டு வெளியே அனுப்ப வேண்டிய நிலை வரும், அதனால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என நினைத்து, பயத்தில் வானதி வீட்டுக்கு செல்லாமல் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications