ஈஸ்வரியிடம் எழிலை போட்டுக் கொடுத்த வர்ஷினி..குடும்பத்திற்கு தெரிந்த உண்மை..கோபியின் திடீர் மனமாற்றம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் ஆபீஸில் நடந்த விஷயங்களை வர்ஷினி, ஈஸ்வரியிடம் போட்டு கொடுத்து இருக்கிறார்.
எழில் படம் பாதியிலே முடிவடைந்த நிலையில் கோபி திடீர் மனமாற்றம் அடைந்திருக்கிறார்.
பாக்கியா சமையல் செய்யும் இடத்தில் பெண்களால் பாக்யாவுக்கு புது பிரச்சனை ஏற்படுகிறது.

பாக்கியாவுக்கு வரும் புது பிரச்சனை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் பாக்யா மூன்று மணி ஆகிவிட்டதால் இனி சாப்பாடுக்காக யாரும் வரவே மாட்டார்கள் எடுத்து வைத்து விடலாம் என்று பேசிக்கொண்டிருக்க அங்கே அதுவரைக்கும் இருந்த செல்வி திடீரென மாயமாகி தனியாக போய் தூங்கிக் கொண்டிருக்கிறார். செல்வியை திட்டி எழுப்பிக்கொண்டிருக்கும்போது, அந்த ஏரியா செக்ரட்டரி உட்பட சில பெண்கள் வந்து புதுசா சாப்பாடு விக்கிறீங்க. இதெல்லாம் இங்கே பண்ணகூடாது என்று சண்டை இடுகின்றனர். அதற்கு செல்வியும் பதிலடி கொடுப்பதால் நாங்கள் உங்களுக்கு வீடு வாடகைக்கு தந்தவர்களிடம் பேசிக் கொள்கிறோம் என்று அவர்கள் அங்கிருந்து கோபத்தோடு கிளம்புகின்றனர்.

ஈஸ்வரிக்கு தெரிந்த உண்மை
அடுத்ததாக ஈஸ்வரி ரூமுக்குள் இருந்து கோபமாக வெளியே வந்து முறைத்துக் கொண்டு இருக்க, ராமமூர்த்தி என்ன ஆனது ஏன் முகம் மாதிரியாக இருக்கிறது என விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது எழிலும் வீட்டிற்கு சோகமாக வர எழில் இடம் விசாரித்து கொண்டிருக்கின்றனர். அப்போது கோபமாக ஈஸ்வரி எழிலுக்கு வேலை போன விஷயத்தையும் அங்கே நடந்த பிரச்சனைகளையும் கூற எழில் மீது கோபத்தை காட்டுகிறார். பாக்யா என்னதான் ஆச்சு என கேட்க நீ கொடுக்கிற செல்லம் தான் என பாக்யாவை திட்டிக்கொண்டு உள்ளே செல்கிறார்.

கோபிக்கு தெரிய வந்த உண்மை
பிறகு எழில் பாக்கியாவிடம் நடந்த விஷயத்தை கூறுகிறார். நான் எல்லாத்தையும் விட்டு மேலே ஏறி வருவேன். நீ என் கூட இருந்தா மட்டும் போதும் என கூறுகிறார். அடுத்ததாக ராதிகா வீட்டிற்கு வரும் விஷயத்தை சொல்ல கோபி கோபப்படுகிறார். எழில் ஆபீஸில் என்ன பிரச்சனை என்று ராமமூர்த்தி இடம் கேட்க எனக்கு அதுவெல்லாம் தெரியாது. ஆனால் எழிலுடைய படத்தில் இருந்து அவனை நிறுத்தி விட்டார்கள். அது மட்டும் தான் எனக்கு தெரியும் என ராமமூர்த்தி கூறுகிறார். பின்பு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கோபி பேச இதில் நீ ஒன்றும் செய்ய முடியாது அது அவனே பார்த்துக் கொள்வான் என்று ராமமூர்த்தி கூறுகிறார்.

கோபிக்கு எழிலின் பதிலடி
அடுத்தது எழில் ஒரு இடத்தில் நின்று கொண்டு டீ குடித்துக் கொண்டிருக்க அங்கு வரும் கோபி எழிலை பார்த்து நடந்த விஷயத்தை பேசி எதுக்கு தேவையில்லாம சண்டையிட்டு இப்படியே லைப் கெடுத்துக்குற ஆரம்பத்தில் ஒரு திரைப்படத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது எளிதான விஷயம் அல்ல நீ அதை செய்திருந்தாய், அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் உன் கோபத்தால் உன்னுடைய வாழ்க்கையை கெடுத்து விடாதே என்று கோபி அட்வைஸ் கொடுத்து கொண்டிருக்கும் போது, பிடிச்ச ஒரு விஷயத்துக்காக பிடிவாதமாய் இருக்கிறது தப்பு கிடையாது. ஒருத்தருக்கு நம்பிக்கை கொடுத்துட்டு அதை கெடுக்கிறது ரொம்ப தப்பு என்னுடைய கோபத்துக்கு பின்னாடி ஒரு நியாயம் இருக்கு என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications