அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாரதிராஜா.. தன்னம்பிக்கை மனிதனின் எழுச்சி! லீக்கான போட்டோஸ்
சென்னை: தமிழ் சினிமாவில் "இயக்குநர் இமயம்" என்று அழைக்கப்படும் பாரதிராஜா பற்றிய சமீபத்திய தகவல்கள் ரசிகர்களை கவலையிலும், அதே நேரத்தில் நிம்மதியிலும் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்த அவரது தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாரதிராஜா உடல்நிலை
கடந்த டிசம்பர் மாத இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக பாரதிராஜா சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட அவர், மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்தார். இந்த நேரத்தில் பலரும் அவரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். குறிப்பாக சீமான், ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பலரும் குடும்பத்தினரை சந்தித்தனர்.
இந்நிலையில் வெளியாகியுள்ள சமீபத்திய புகைப்படத்தில், பாரதிராஜா மிகவும் மெலிந்த நிலையில் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. "இவர் தான் பாரதிராஜாவா?" என்று கேட்கும் அளவுக்கு அவரது தோற்றம் மாறியிருந்தது.
ஆனால் அதே நேரத்தில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வெளியிட்ட தகவலில் ஒரு நல்ல செய்தியும் இருக்கிறது - தற்போது அவர் நலமாகி வருகிறார், விரைவில் வீட்டிற்கு திரும்பவும் தயாராக உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. எல்லாருக்குமே வயது ஆக ஆக தோற்றத்தில் மாற்றம் வரும் அதேபோல இப்போது பாரதிராஜாவிற்க்கும் நடந்து இருக்கிறது. முதுமையில் தன்னுடைய மகனின் இறப்பிற்கு பிறகு பல வேதனைகளை தாங்கி வந்த பாரதிராஜா மீண்டு பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசை.

பாரதிராஜா யார்?
1970களில் தமிழ் சினிமாவை முற்றிலும் மாற்றியவர் தான் பாரதிராஜா. நகர கதைகளை விட்டு, கிராம வாழ்க்கையை இயல்பாகவும் உணர்ச்சிவசப்படுத்தும் விதமாகவும் திரையில் கொண்டு வந்தவர்.
'16 வயதினிலே', 'மண்ணில் இருந்து மண்ணுக்கு', 'அலையோசை', 'கருத்தம்மா' போன்ற படங்கள் அவரது சினிமா பயணத்தில் மைல் கற்களாக அமைந்தவை. புதிய முகங்களை அறிமுகப்படுத்துவது, இயல்பான நடிப்பு, உண்மை வாழ்க்கை கதைகள்-இவை எல்லாம் அவரது ஸ்டைல்.
இயக்குனராக மட்டுமல்ல, நடிகராகவும் அவர் பல படங்களில் நடித்துள்ளார். வயது ஆகியும் அவர் நடித்துக் கொண்டிருந்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
பாரதிராஜாவின் குடும்பம்
பாரதிராஜா குடும்ப வாழ்க்கையும் எளிதானதல்ல. அவருக்கு மகன் மனோஜ் பாரதிராஜா இருந்தார். அவர் சில படங்களில் நடித்திருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு மனோஜ் மரணம் அடைந்தது பாரதிராஜாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அந்த இழப்பிலிருந்து அவர் முழுமையாக மீளவில்லை என்று நெருங்கியவர்கள் கூறுகிறார்கள்.
அவரது மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்கள் மலேசியாவில் மகள் வீட்டில்தான் பாரதிராஜா இருந்தார். பின்னர் சென்னை திரும்பிய பிறகுதான் உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டது.
ரசிகர்களின் உணர்வு
பாரதிராஜா என்பது ஒரு பெயர் மட்டும் இல்லை - அது ஒரு காலம். தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய பாதையை காட்டிய மனிதர்.அவரை இப்படியாக மெலிந்த நிலையில் பார்க்கும் போது ரசிகர்களுக்கு வலி இருந்தாலும், "அவர் மீண்டு வருகிறார்" என்ற செய்தி ஒரு நிம்மதியை கொடுத்துள்ளது.
ஒரு பெரிய இயக்குநர், ஒரு தந்தை, ஒரு கலைஞன் - இந்த மூன்றையும் சேர்த்த மனிதர் தான் பாரதிராஜா. வாழ்க்கையில் பல உயரங்களையும், தாழ்வுகளையும் பார்த்தவர்.
இப்போது உடல்நிலை சவாலையும் கடந்து மீண்டு வருகிறார் என்பதே ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷம். "இயக்குநர் இமயம்" இன்னும் பல ஆண்டுகள் நலமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.
-
சீமானுடன் நடிக்கும் போது நடந்த சம்பவம்.. வெளிப்படையாக பேசிய நடிகை கிரித்தி ஷெட்டி! குவியும் கமெண்ட்ஸ் -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன் -
ஜல்லிக்கட்டு மட்டுமில்ல.. மதுரை கிடா சண்டையை உலகிற்கு கொண்டு வந்த மலையாள இயக்குநர்! பின்னணி நெகிழ்ச்சி -
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
மாநகரம் ஸ்ரீ-யா இது? மீண்டும் பழைய நிலை, மாஸ் லுக்.. இளம் பெண்ணுடன் உருக்கமான போஸ்ட்! -
பெரிய தப்பு செய்த திரிஷா.. ஒரே ஒரு போட்டோவால் கொந்தளிப்பு.. இந்த நேரத்தில் இது தேவையா? வருத்தத்தில் ரசிகர்கள் -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
காதலர் தினம் பட ஹீரோயினி சோனாலிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன புகார்.. நடிகை கொடுத்த விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான்













Click it and Unblock the Notifications