இப்படியெல்லாம் ஒருத்தன் கூட நட்பா பழகுவதற்கு சும்மா இருக்கலாம்.. பிரியங்காவை சீண்டும் தாமரை
சென்னை: என்ன தான் நட்பாக இருந்தாலும் போட்டியில் பிரியங்காவை பற்றி நிரூப் பேசியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
எப்பவாவது இப்படி சண்டை போடலாம் ஆனா எப்பவும் இப்படியேவா சண்டை போட்டுக் கொண்டு இருப்பது என்று ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.
பிரியங்கா நிரூப் சண்டையை பார்த்து தாமரை கழுவி ஊற்றி இருக்கிறார்.

எப்பவுமே இப்படியா செய்வீங்க??
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கிய நாளில் இருந்து நாங்கள் நண்பர்கள் என்று பிரியங்காவும் நிரூப்பும் கூறிக் கொண்டிருந்தாலும், டாஸ்க் என்று வரும்போது இவர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை என்று ரசிகர்கள் அலறி வருகின்றனர். ஒரு முறை இப்படி செய்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் சண்டை போடுவது போலவே இவர்கள் செய்யும் செயல் அனைவரையும் குழப்பமடைய செய்கின்றது.

போட்டிபோடும் போட்டியாளர்கள்
இந்த வார தலைவர் பதவிக்காக பிரியங்காவும் நிரூப்பும் மீண்டும் காரசாரமாக மோதிக் கொள்கின்றனர். இவர்களுக்கு வேற வேலையே இல்லையா என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் தாமரையும் திட்டி வருகிறார். இந்த வார தலைவர் பதவிக்காக நிரூப்,சிபி, பிரியங்கா,ஐக்கி, நான்கு பேரும் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர்.

வெளிப்படையான முடிவுகள்
இந்த தலைவர் போட்டியில் யார் தலைவராக கூடாது என்று போல்டாக தங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். இவரை எல்லாம் தயவுசெய்து தேர்ந்தெடுத்தா, வீடு விளங்காது என்று வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று இமான் அண்ணாச்சி புது டாஸ்க் வாசித்து கொண்டிருக்கிறார். இதை கேட்டதும் சக போட்டியாளர்கள் தங்களுடைய வாக்குகளை அளிக்க போட்டியாளர்களின் முன்பு வைத்திருக்கும் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

தாமரையின் புலப்பம்
அதில் பிரியங்கா நீங்கள் நிரூப்புக்கு கண்டிப்பா இந்த பாட்டிலை கவுத்தலாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு ஏன் என்று கேட்டதற்கு, ஏன்னா அவருடைய ஆளுமையை கேப்டன்சி டாஸ்க் அவர் செய்தது நமக்கு தெரியும். அதனால் என்று கூறியிருக்கிறார். அடுத்ததாக வந்த தாமரை நிரூப்பிடம் சென்று நீ நம்பின பிள்ளையே உனக்கு ஊத்த சொல்லுது என்று சொல்லி இருக்கிறார்.அதற்கு நான் அவள நம்பவே இல்லையே..!! நான் எப்ப அவளை நம்பினேன்?? என்று காரசாரமா கேட்டிருக்கிறார். அதற்கு தாமரை இப்படியெல்லாம் ஒருத்தன் கூட நட்பா இருக்கிறதுக்கு சும்மா இருந்துவிடலாம் என்று புலம்பியபடியே பிரியங்காவின் பக்கம் திரும்பியிருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications