ஜெயிக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது, பதட்டத்தில் அமீர்... காரணம் இதுதானா??
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பண பெட்டியைப் பார்த்து அமீர் மனம் மாறியுள்ளார்.
தன்னுடைய மனதில் இருக்கும் பதட்டத்தை போட்டியாளர்கள் இடம் வெளிப்படுத்தி பேசியதை பார்த்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

வழக்கமான சம்பிரதாயம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் சம்பிரதாயம் தான் இந்த கேஸ் பெட்டி டாஸ்க். இதில் கடைசி வாரத்திற்கு முன்பு இருக்கும் போட்டியாளர்களுக்கு கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பாக இருந்துவருகிறது. கடந்த சீசன்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இந்த சீசனில் அதிகமான அமௌன்ட் கிடைக்குமென்று போட்டியாளர்கள் இரண்டு நாட்களாக வெயிட் பண்ணி கொண்டிருக்கின்றனர். இந்தப் பெட்டியை யார் எடுப்பார்கள் என்று ரசிகர்களிடம் பதட்டமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

ஏறி, இறங்கும் தொகை
முதல் நாளில் 3லட்சத்தோடு சரத்குமார் பெட்டியைக் கொண்டுவந்து வைத்ததும் பலருக்கும் பெரிய ஷாக்காக இருந்தது. கடந்த சீசன்களில் கூட 5 லட்சம் கிடைத்தது. ஆனால் இந்த சீசன் அவ்வளவு மொக்கையாகவா இருக்கிறது..??அதனால்தான் அமௌன்ட் குறைந்துவிட்டதா??? என்று பலர் கூறிவந்தனர். இந்த நிலையில் நேற்று படிப்படியாக அதிகரித்தும், குறைந்தும் கொண்டிருந்தது. ஒரு முறை ஏற்றத்திலும், ஒரு முறை இறக்கவும் இருந்தது. இந்த பணப் பெட்டியின் மதிப்பு ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது .பெட்டியை எடுக்கப் போவது யாரென்று போட்டியாளர்களுக்கு சஞ்சலம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

நிரூப்பின் சாமர்த்தியம்
முதல் நாளில் 3லட்சம் இருக்கும்போதே பெட்டியை நான் எடுத்தாலும் எடுத்துவிடுவேன்....சொல்ல முடியாது என்று தன்னுடைய மனநிலையை வெளிக்காட்டி இருந்தார் நிரூப். தான் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை என்பதை ரசிகர்களுக்கு சொல்லாமல் சொல்கிறாரா?? என்று பலர் கூறி வந்தனர். ஆனால் அது அப்படி அல்ல தான் எடுக்க போகிறேன்...எடுக்கப் போகிறேன்...என்று சொல்லியே அடுத்தவர்களை மனதை மாற்றுவதற்கான முயற்சி தான். இதுவும் ஒரு ஸ்டார்ட்டர்ஜி என்று நிரூப் நிரூபித்துக் கொண்டிருந்தார். நிரூப் ஆசைப்பட்டபடி தாமரைச்செல்வி பெட்டியை எடுக்காமல் தனக்கு தேவை இல்லை என்று கூறிவிட்டார்.

இது உண்மையாக இருக்குமோ
இன்று பணத்தின் மதிப்பு முதல் ப்ரமோவில் 11 லட்சத்தில் இருக்கும் நிலையில் அமீர் எடுக்கப்போவதாக போட்டியாளர்கள் இடம் கூறிக் கொண்டிருக்கிறார். அவரும் நிரூப் போன்று செயல்படுகிறாரா??என்று பலருக்கும் சந்தேகம் எழுப்பி கொண்டு இருந்தாலும் அதற்காக அவர் சொன்ன காரணம் சரி போலத்தான் இருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பே அமீர் இந்த சூட்கேஸ் பெட்டியை பெற்றுக்கொண்டு விளையாட்டிலிருந்து விடைபெற்றார் என்ற செய்திகள் வைரலாகி வரும் நிலையில், இது உண்மையாக இருக்குமோ என்று ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications