பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவருமான விஜய் குறித்து பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலி தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வருவது சமீப நாட்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே பல முறை விஜயை குறிவைத்து பேசிய ஜூலி, தற்போது மீண்டும் ஒரு புதிய வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார்.

தனி நபர் தாக்குதல்
ஜூலி திமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட நிலையில் விஜயை குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்ட இந்த புதிய வீடியோவில் ஜூலி பேசும்போது, "எங்களுடைய தலைவர் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். அதனால் நான் எந்த தனி நபர் தாக்குதலும் செய்ய மாட்டேன்," என்று ஆரம்பிக்கிறார்.
அவர் தொடர்ந்து, "நானும் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி பேசலாம் என்று நினைத்தேன். ஆனால் அந்த உரிமையை நான் தான் வைத்திருக்கிறேனா என்று எல்லோரும் கேட்பார்கள். அதனால் அதை பற்றி இனி பேசப் போவதில்லை. எங்கள் தலைவர் திமுக ஆட்சியில் செய்த நல்ல விஷயங்களைப் பற்றி தான் பேசப்போகிறேன்," என்று கூறுகிறார்.
விஜயை குறிவைத்து கடும் விமர்சனம்
அதன் பிறகு விஜயை நேரடியாக குறிவைத்து, "பச்ச துண்டு போட்டுக்கிட்டு தஞ்சாவூர்ல கத்தினா விவசாயம் வந்துருமா? விஜய்க்கு தெரிந்தது ஷூட்டிங் தான்... அந்த சூட்டிங்காக 50 பேரை கொன்னுட்டாரு," என கடுமையாக பேசுகிறார். இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.
அருண் ராஜா பதிலடி
இந்த விவகாரத்தில் சீரியல் நடிகர் அருண் ராஜா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பதிவிட்டுள்ளார். அதில் அவர், "நானும் உங்களைப் பற்றி பேச கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா நீங்க தொடர்ந்து தேவையில்லாத விஷயங்களையும், வதந்திகளையும் பரப்பிட்டு இருக்கீங்க. ஜூலி மேடம்... உங்க தலைவர் சொன்ன மாதிரி பர்சனல் அட்டாக் பண்ணாம, அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை மட்டும் பேசுங்க. அத விட்ரு கட்டுக்கதைகள் பேசாதீங்க," என்று நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
ரசிகர்கள் எதிர்வினை
இந்த வீடியோ வெளியாகியவுடன் சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகள் வெளியாகி வருகின்றன. ஒருபுறம், சிலர் ஜூலியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். "அவதூறு பேசாதீர்கள்", "அதிகமாக போயிடுது" என்ற கருத்துகளும் பதிவாகி வருகின்றன.
மற்றொரு புறம், சிலர் அரசியல் கருத்து சொல்லும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்று கூறி அவரை ஆதரிக்கும் பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
முன்பும் விஜயை விமர்சித்த ஜூலி
இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் ஜூலி, விஜயின் அரசியல் பயணம், கூட்டங்கள், பேச்சுகள் குறித்து பல முறை விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக தவெக கட்சி ஆரம்பித்த பிறகு, அவரது கருத்துகள் அதிகமாக கவனம் பெற்றன. அதோடு, திமுகவில் இணைந்த பிறகு, அந்தக் கட்சிக்கு ஆதரவாகவும், விஜயின் அரசியல் நடவடிக்கைகளை கேள்வி எழுப்பியும் தொடர்ந்து பேசி வருகிறார்.
தொடர்ந்து சர்ச்சையில் ஜூலி
ஒவ்வொரு முறையும் ஜூலி வெளியிடும் வீடியோக்கள் சர்ச்சையை கிளப்பி வருகிறது. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், விஜயை குறிவைத்து ஜூலி வெளியிட்ட இந்த புதிய வீடியோவும், அதற்கு வந்துள்ள எதிர்ப்புகளும் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் இன்னும் எவ்வளவு தூரம் போகும் என்பது தான் இப்போது அனைவரும் கவனித்து வரும் விஷயமாக உள்ளது.
-
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன்












Click it and Unblock the Notifications