மாற்றப்பட்ட பிக்பாஸ் ரூல்ஸ்... காரணம்.. இதுதான் முடிவா??
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி 5 வது சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது.
இதுவரைக்கும் இல்லாததை இந்த சீசனில் பார்த்ததும் ரசிகர்கள் ஒருபக்கமாக குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

புதுமையான பல செயல்கள்
பிக்பாஸ் 5வது சீசன் முடிவடைய ஒரு நாளே இருக்கும் நிலையில இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து பல செயல்கள் புதுமையானதாக செய்து வரும் பிக் பாஸை பார்த்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர். இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை வித்தியாசத்தை செய்ய போகிறோம் என பிக்பாஸ் விதவிதமான பல வேலைகளை பார்த்து வருகிறது என்று பலர் குற்றம் சாட்டிக் கொண்டு வருகிறார்கள்.

ரசிகர்களின் பலதரப்பட்ட கருத்து
சில ரசிகர்கள் இப்படித்தான் ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது வெளியே தெரியாமல் இருந்தது தற்போதைய சீசனில் அனைத்தும் வெட்டவெளிச்சமாக மாட்டிவிட்டது என்று விளக்கம் கொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பல நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டாக கூறி வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் அப்படி எந்த விஷயமும் இங்கே மாற்றமாக நடக்கவில்லை என்று பிக் பாஸுக்கு ஆதரவு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி தற்போது கருத்துப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட சலுகை
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ வாக இருப்பதால் இதைப் பார்ப்பதற்காக நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் ஒளிபரப்பப்படும் என்று கூறி வந்த நிலையில் தற்போது 106 நாட்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் இருக்கும் போட்டியாளர்கள் 100 நாட்கள் உள்ளே தான் இருக்க வேண்டும் என்று விதி இருக்கும் நேரத்தில் பிரியங்கா தற்போது வெளியே அனுப்பப்பட்டு இருக்கிறார். ஆனால் கடைசி நாளான கிராண்ட் பினாலேவில் நேரடியாக கலந்து கொள்ளலாம் என்று பிக்பாஸ் அறிவுறுத்தி இருக்கிறது. இது பலதரப்பட்ட ரசிகர்களின் கருத்துக்களை பெற்று வருகிறது.

ஒருவேளை இருக்குமோ
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த தாமரைச்செல்வி தான் உள்ளே இருக்கும் போது மருத்துவமனைக்கு வெளியே சென்று விட்டு வந்ததாக கூறி இருந்தார். இதுவே சமூக வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது நேரடியாக பிரியங்காவை வெளியே அனுப்பி இருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் எப்போதும் போல இந்த கிராண்ட் ஃபினாலே லைவ் நிகழ்ச்சியாக நடைபெறவில்லை என்ற செய்திகளும் தற்போது வெளியாகியுள்ளது. சனிக்கிழமை அன்று கிராண்ட் பினாலே நிகழ்ச்சியை நடத்தி அதை ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்புவதாக செய்திகள் பரவி வருகிறது. இந்த மாதிரி புதிய விதிகள் பிக் பாஸ் செய்வதை பார்க்கும் போது ஏற்கனவே விஜய் டிவி செலக்ட் பண்ணி வைத்திருக்கும் போட்டியாளருக்கு பரிசை கொடுப்பதற்காகத்தான் இப்படி செய்கிறார்களா??என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications