பிக் பாஸ் தமிழ் 5: உள்ளே கிடைத்த அற்புதமான உறவு ராஜூ... பீலிங்கை கொட்டி பீல் பண்ண வைத்த அமீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் தனக்கு கிடைத்த ராஜூவின் அன்பின் பெருமையை அமீர் இறுதிநாளில் பேசியுள்ளார்.

தனக்கும் ராஜுவுக்கும் இந்த மாதிரி ஒரு பிணைப்பு இருக்கிறது என்று அனைவரையும் பீல் பண்ண வைத்துள்ளார்.

வெளிப்படையான பாசம்

வெளிப்படையான பாசம்

பிக் பாஸ் ஐந்தாவது சீசனின் இறுதி போட்டியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வெளியேறி வருகின்றனர். இதில் நான்காவது போட்டியாளராக வெளியேறி இருக்கும் அமீர் தன்னுடைய மறக்கமுடியாத அனுபவங்களையும் மனதை பாதித்த உறவுகளைப் பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார். ரசிகர்கள் பலர் பீல் பண்ணி உள்ளனர். இது வரைக்கும் இந்த மாதிரி அமீரை ரசிகர்கள் பார்க்காததால் முதல்முறையாக இவருடைய பாசத்தை பார்த்து திகைத்துப் போய் இருக்கின்றனர்.

பீல் பண்ணும் பாசக் கதை

பீல் பண்ணும் பாசக் கதை

பிக்பாஸ் இறுதி போட்டியில் இருக்கும் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக அமீர் இருந்தாலும் இன்று 4-வது போட்டியாளராக வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் தனக்கும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ராஜுவுக்கும் இருக்கும் பாசம் அண்ணன் தம்பி பாசத்தை போன்று ஒரு நெருக்கமாக உள்ளது. ராஜூவின் அன்பு எனக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். பிக் பாஸ் வீட்டுக்குள் தன்னுடைய மனதை கவர்ந்த அண்ணன்தான் ராஜு என்று அண்ணன் தம்பி பாச கதைகளை ஓட விட்டிருக்கிறார். மேடையில் இவர் பேசிய பேச்சை கேட்டு கீழே உட்கார்ந்து இருந்த பல ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் இட்டுள்ளனர்.

ஏற்கனவே ராஜு கூறியது தான்

ஏற்கனவே ராஜு கூறியது தான்

அமீர் தன்னுடைய அண்ணனாக ராஜூவை கூறியதும் ராஜுவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் பூரிப்போடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குள் இப்படி ஒரு பாசமா?? என்று ரசிகர்களும் அவரின் வார்த்தைகளை கேட்டு ரசித்து வருகிறார்கள். இந்த வீட்டிற்குள் வந்த ஒரு சில நாட்களுக்குள் தான் ராஜூவுடன் எனக்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதும் சரத்குமார் வந்த எபிசோடுகளில் ராஜு இதை கூறியுள்ளார்.

 திடீர் மாற்றமா?

திடீர் மாற்றமா?

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நீர் தான் ஜெயிக்கவில்லை என்று ஏமாற்றமும் விரக்தியும் இருந்தாலும் அவருடைய உண்மையான பாசம் தற்போது மேடையில் வெளிப்பட்டுவிட்டது .ஆரம்பத்தில் திரையில் பாவனியை பார்த்ததும் பாவனி... பாவனி... என்று கூறிக் கொண்டிருந்த இவர் ராஜூவை பார்த்ததும் தன்னுடைய பாசத்தை காட்ட தொடங்கியதும், ரசிகர்கள் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+