இவ்ளோ சாக்ரிஃபைஸ் செய்தும் இந்த வாரம் வெளியேறும் நபர் இவர்தானா? கடைசியில் எல்லாம் வேஸ்ட்டா போச்சா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 97வது நாள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறும் நபர் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் நடந்து வரும் போட்டியாளர்கள் அனைவரும் தங்களால் முடிந்த அளவிற்கு சாக்ரிஃபைஸ் செய்து வருகின்றனர்.
என்னதான் பிக்பாஸிற்காக போட்டியாளர்கள் sacrifice செய்தாலும் இந்த வாரம் வெளியேறும் நபர் ஏ டி கே தான் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடைசி கட்டத்தில்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கிறது என்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சியை முடிவடைய இருக்கும் நிலையில் இந்த வாரம் சாக்ரிஃபைஸ் டாஸ்க் நடந்து வருகிறது. இதில் பிக்பாஸ் சொன்ன சாக்ரிஃபைஸ் ஏற்கனவே போட்டியாளர்கள் செய்து வரும் நிலையில், அவர்கள் செய்தது குறைவாக இருக்கிறது என்றால் தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த போட்டியாளர்கள் தாங்கள் கொடுப்பதை செய்ய பிக் பாஸ் அறிவுறுத்தி இருக்கிறார்.

மீண்டும் சாக்ரிஃபைஸ்
பிக் பாஸ் சொன்னபடி பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் விக்ரமன், அசீம், ஏ டி கே, மைனா, அமுதவாணன், ஷிவின், கதிர் அனைவருமே ஒவ்வொரு சாக்ரிஃபைஸ் செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் இவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக வந்த பழைய போட்டியாளர்களால் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அமுதவாணன் மற்றும் ஏடிக்கே தங்களுடைய தலை முடியை மாற்றி அமைத்திருக்கின்றனர். விக்ரமன் ஒரு பக்கத்தை மீசை மற்றும் தாடியை எடுத்திருக்கிறார். ஷிவின் தன்னுடைய முகத்தை கருப்பாக மாற்றி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் மைனா நந்தினியும் தன்னுடைய ஒரு பக்கத்து முடி மீண்டும் குட்டையாக வெட்டி இருக்கிறார்.

பலமுறை தப்பிவிட்டார்
இந்த நிலையில் இந்த வாரம் அமுதவண்டனை தவிர மீதமிருக்கும் போட்டியாளர்கள் எலிமினேஷனில் இருக்கின்றனர். அவர்களில் யார் வெளியேறுவார்கள் அதுவும் கடைசிவார நாமினேஷனில் வெளியேறும் போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வாரம் ஏடிகே தான் வெளியேற இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஏடிகே பல வாரங்கள் வாக்குகளின் அடிப்படையில் கடைசியில் இருந்து வந்தாலும் ஆனால் கடைசி நேரத்தில் எதிர்பாராமல் வேறு போட்டியாளர் வெளியேறுவார் ஆனால் கடைசி நேரத்தில் ஏடிகே தப்பித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த வாரமும் இவருடைய பெயர் தான் வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது.

எல்லாம் வேஸ்ட்டா போச்சா
ஒவ்வொரு வாரமும் ஏடிகே தப்பித்துக் கொண்டிருந்தாலும், இந்த வாரம் அவர் தன்னுடைய தலைமுடியை பிக் பாஸ் டாஸ்க்காக இழந்து சாக்ரிஃபைஸ் செய்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அவர் இதுவரைக்கும் போட்டு வந்த அவருடைய உடைகளை பிக்பாஸிடம் கொடுத்துவிட்டு அங்கு உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் உடைகளை வாங்கி போட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் இவ்வளவு செய்தும் கடைசியில் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்ற தகவல்களுக்கு ரசிகர்கள் எல்லாம் வேஸ்ட்டா போச்சா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே ஒவ்வொரு வாரமும் கடைசி வரைக்கும் வெளியேறுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில் எதிர்பாராத விதமாக சேவ் ஆகிவிடுகிறார் .அந்த மாதிரி தான் இந்த முறையும் நடக்கப் போகிறதா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் பிக்பாஸில் எல்லாமே நாளை தான் தெரியவரும்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications