ஜூலி வந்தால் நமக்கு ஜாலி... கொண்டாடும் நெட்டிசன்கள்... ஆரம்பமே இப்படியா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி மீண்டும் கலந்துகொள்வது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது போட்டியாளராக களமிறங்கி இருக்கும் ஜூலியை முதல் ப்ரமோவில் பார்த்ததும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்களும் கொண்டாடி வருகின்றனர்.

ஓவியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் முதல் சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ஆரம்பத்தில் குழந்தைத்தனமான தன்னுடைய கேரக்டரால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இருந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய கேரக்டர் வித்தியாசமாக வெளியிடப்பட்டதாக இவர் கூறி வந்தாலும், நெட்டிசன்கள் இவரை கலாய்க்க தொடங்கிவிட்டனர். அதுவும் ஓவியா விஷயத்தில் இவர் நடந்து கொண்டது தற்போது வரைக்கும் பல ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தான் இருந்து வருகிறது.

நெட்டிசன்களை கண்டுகொள்ளாத ஜூலி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு இவர் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர பெண்மணியாக வலம் வந்த இவர் இந்த நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய பெயரையும், புகழையும் இழந்துவிட்டார். ஒரு செவிலியராக பணியாற்றி வந்த இவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மாடலிங் பெண்ணாக மாறி விட்டார். மாடலிங்கில் இவர் எடுக்கும் போட்டோஷூட் போட்டோக்கள் அடிக்கடி வைரலாகி வந்து கொண்டிருந்தது. என்னதான் இவரை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டு இருந்தாலும் அதை பற்றி கண்டு கொள்ளாமல் தன்னுடைய முன்னேற்றத்தில் கவனமாக இருந்து வந்தார்.

மீண்டும் அதே இடத்தில்
போட்டோ ஷூட்டில் பிஸியாக இருந்த இவர் தற்போது சில நாட்களாகவே அந்த அளவிற்கு போட்டோஷூட் எடுக்கவில்லை. இது இவருடைய ரசிகர்களுக்கு கொஞ்சம் பீலிங்கை கொடுத்திருந்தது. விஜய் டிவியில் மீண்டும் பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருந்த இவர் பாதியிலே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மீண்டும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு வாய்ப்பு கொடுத்து இவர் விட்ட இடத்தை பிடிப்பதற்கு வழி செய்துள்ளது.

ரசிகர்களின் கருத்து
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டியாளராக ஜூலி அறிமுகமாவதை பார்த்ததும் நெட்டிசன்கள் வழக்கம்போல கலாய்க்க தொடங்கி விட்டனர். இந்த நிகழ்ச்சியை இதுவரைக்கும் ஓட்டி வந்த ரசிகர்கள் தற்போது இவரின் அறிமுகத்தை வைத்து ஓட்ட தொடங்கிவிட்டார்கள். எப்படியும் ஜூலியால் இந்த நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி விடும் என்றும், ஜூலி வந்தால் நமக்கு ஜாலிதான். ..இனி நமக்கு வேறென்ன வேண்டும்..என்றெல்லாம் விதவிதமாக கமெண்ட்களை கொட்டி வருகிறார்கள். முதல் ப்ரமோவிலே ஜூலியை கலாய்த்து பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு கொடுப்பது போல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் தான் இழந்த இடத்தை பிடித்து விடுவாரா??என்பது இவருடைய ரசிகர்களின் கேள்வியாக இருந்துவருகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications