அனிதாவிற்குள் இப்படி ஒரு மாற்றமா? இதை எதிர்பார்க்கலையே ரசிகர்கள்..இதற்கான காரணம் இதுதானாம்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அனிதாவின் நடவடிக்கைகளில் இவ்வளவு மாற்றமா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.
ஏற்கனவே பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டதற்கும் தற்போது இருப்பதற்கு அனிதாவிற்குள் பல வித்தியாசங்கள் ஏற்பட்டிருப்பதாக ரசிகர்கள் கணித்து வருகிறார்கள்.

அதிகமான சென்டிமென்ட் சீன்கள்
ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் அனிதா சம்பத் ஏற்கனவே ஒரு செய்தியாளராக பலருக்கும் தெரிந்திருந்தாலும், ஒரு பிக் பாஸ் போட்டியாளராக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டு நன்கு பரிச்சயமாகி இருந்தார். இவருடைய துணிச்சலான கேரக்டரை பார்த்து ரசிகர்கள் பலர் இவருக்கு ஆதரவு கொடுத்து இருந்தாலும், பல நேரங்களில் இவருடைய அழுகாச்சி சென்டிமென்ட் சீன்கள் பலருக்கும் வெறுப்பாகி இருந்ததாகக் கூறி வந்தனர்.

அதிர்ச்சி தந்த இழப்பு
நான்காவது சீசனில் கலந்துகொண்ட பிறகு தன்னுடைய வாழ்க்கையில் பல முக்கியமான தருணங்களை அனிதா சம்பத் சந்தித்துள்ளார். அந்த சீசனில் இவர் வெளியேறிய ஒரு சில நாட்களில் இவருடைய பாசத்திற்கு உரிய தந்தையின் மரணம் இவரை அதிகமாக பாதித்திருக்கிறது. தந்தையின் மரணத்திற்கு பிறகு மீண்டும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அறிமுகமாகி இருந்தார். அப்போதே இவரிடத்தில் சில மாற்றங்கள் தெரிவதாக ரசிகர்கள் கூறிவந்தனர். ஆனாலும் தனக்கு தைரியத்தை கொடுத்து வந்த தந்தையின் இழப்பு இவருக்கு பெரிய அதிர்ச்சியாகவும் ,வருத்தத்தை கொடுத்ததாகவும் இருந்துள்ளது.

லைக்குகளை அள்ளிய பிரஸ் மீட்டிங்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் விஜய் டிவியில் மீண்டும் பிக் பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஒரு சில வருடங்களில் இவருடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் மற்றும் வெற்றி தோல்விகள் இவருக்கு மனதில் வலிமைகளை கொடுத்திருப்பதாக இவர் கூறியிருக்கிறார். அது போலத்தான் தற்போது கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நடந்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஏற்கனவே நடந்து முடிந்த பிரஸ் மீட்டிங்கில் டாஸ்கில் கூட இவருடைய பங்களிப்பு ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

என்னது விஷ பாட்டிலா
பிக்பாஸ் அல்டிமேட் இந்நகழ்ச்சியில் தற்போது நீ யார் என்று எனக்கு தெரியும் எனும் டாஸ்க்கு நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்கள் தங்களுடைய மனதில் இருக்கும் கருத்துக்களுக்கு ஏற்ப்ப பிற போட்டியாளர்களுக்கு பட்டங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அனிதாவிற்கு விஷ பாட்டில் டைட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு நான்கு போட்டியாளர்கள் இந்த ஓட்டு போட்டு இருக்கிறார்கள். ஆனால் இதை சகஜமாக எடுத்துக் கொண்டு என்னையும் பார்த்து 4 பேர் பயப்படுகிறார்கள் என்று இந்த பட்டத்தை மகிழ்ச்சியோடு வாங்கியிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதே பழைய அனிதாவாக இருந்திருந்தால் அழுது இங்கே பிரச்சனை பண்ணியிருப்பார் என்று கூறி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications