சிவகார்த்திகேயனை மிரள வைத்த சிறுவன்... பாராட்டு அனிருத்துக்கா??
சென்னை: தன்னுடைய பாடலுக்கு ஆட்டம் போட்ட சிறுவனைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
Recommended Video
திரைப்படத்தில் பாடல் ஹிட்டானதை தொடர்ந்து குழந்தைகளையும் அவர்கள் அதை நினைத்து குதூகலித்துள்ளார்.
ஆட்டம் போட்ட சிறுவனைப் பார்த்து அசந்துபோய் இருந்தாலும் வாய்ப்புகளை அனிருத்துக்கு வாரி வழங்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் போஸ்ட்
தன்னுடைய பாடலுக்கு க்யூட்டாக டான்ஸ் ஆடிய சிறுவனை பாராட்டியும், அனிருத்தை புகழ்ந்தும் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வீடியோ சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவராலும் லைக் செய்யப்பட்டு படு வைரலாக கலக்கிக் கொண்டிருக்கிறது.

இளம் ரசிகர்களை கவரும் லிரிக்ஸ்
இப்பொழுது இருக்கும் இசை அமைப்பாளர்களில் இளம் இசையமைப்பாளரான அனிருத், தான் கம்போஸ் செய்யும் படங்களின் பாடல்களை வித்தியாசமான லிரிக்ஸ் மற்றும் மியூசிக் மூலம் இளம் ரசிகர்களை எளிதில் கவர்ந்து பாடல்களை ஹிட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். பெரும்பாலும் பாடல் வரிகள் பிறமொழி கலவையோடு இருந்தாலும் தன்னுடைய இசை அமைக்கும் விதத்தின் மூலம் அனைவரையும் கேட்க வைத்து ஆட வைத்து விடுவார். இதனாலேயே பெரிய பெரிய நடிகர்கள் தங்கள் படங்களுக்கு அனிருத்தை விரும்பி கமிட் செய்து வருகின்றனர்.

சிறுவனை கவர்ந்திழுத்த பாடல்
இவரது ஒருசில பாடல்கள் வேறு படங்களில் இருந்து காப்பி அடித்தது என்று குற்றச்சாட்டு வந்தாலும், தன்னுடைய மியூசிக்கிற்கு இவர் தேர்ந்தெடுக்கும் பாடல் வரிகள் மூலம் அதையெல்லாம் மறக்கடிக்கச் செய்து விடுகிறார். இசையமைப்ப தோடு மட்டுமின்றி தன்னுடைய பாடும் திறமை மூலமும் இளம் தலைமுறை இசை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட வருகிறார். ரீசன்ட் ஆக சிவகார்த்திகேயனின் டான் படத்திற்காக இவர் இசையமைத்து பாடிய பாடலுக்கு ஒரு சிறுவன் குத்தாட்டம் போட்ட வீடியோ பார்த்த சிவகார்த்திகேயன் அந்தச் சிறுவனை புகழ்ந்தும் அனிருத்தை பாராட்டியும் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

ஜலபுல ஜங் ஆட்டம்
சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் படம் டான் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் தற்போது இந்த படத்தில் இருந்து 'ஜலபுல ஜங்' என பெயரிடப்பட்ட பாட்டின் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி அனிருத்தின் வழக்கமான பாடல் போல் பெரிய ஹிட் அடித்து விட்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை கேட்டவுடன் ஆடவைக்கும் இந்தப்பாடலை கேட்டு சிறுவன் ஆடிக் கொண்டிருப்பதை பார்த்து தான் "இந்த மனுஷன் எல்லாரையும் ஆட வைத்து விடுகிறார்" என்று அனிருத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார் சிவகார்த்திகேயன்.












Click it and Unblock the Notifications