கையை தூக்கி அங்கே தொங்கியபடி...ரசிகர்களின் மனதை ஆடவிட்ட தர்ஷா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு சில நாட்களாக இதே பாவாடை தாவணியில் பார்த்து வந்தாலும் சலிக்காத பேரழகியாக வலம் வந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தாவை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆலமர விழுதினில் ஆட்டம் போடும் இவருடைய அழகை பார்த்து கவிதைகளை பொழியும் ரசிகர்களின் கவிதைகளால் இணையதளமே ஆட்டம் கண்டு விட்டது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேரழகியான இவருடைய சைடு போஸ் ரசிகர்களின் கண்ணுக்குள்ளேயே நிற்கிறதாம்.

அது இல்லன்னா இது இருக்கு

அது இல்லன்னா இது இருக்கு

சீரியலில் இருந்து விலகி இருந்தாலும் தர்ஷா குப்தா தற்போது போட்டோஷுட்டில் பிஸியாக மாறிவிட்டார். இவருடைய லேட்டஸ்ட் போட்டோக்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தை பாடாய்படுத்தி வருகிறது. பலருடைய கண்களுக்கும் குளுமையை காட்டிக் கொண்டிருக்கும் இவருடைய பாவாடை தாவணியின் தரிசனம்தான் பலருக்கு பொழுதுபோக்காகவும் இருக்கிறதாம். நடிகைகள் பலரும் போட்டோ சூட்டை தேர்ந்தெடுத்திருப்பது போல தர்ஷா குப்தாவும் கலக்கலாக இதில் கலக்கி வருகிறார். சீரியலில் தொடங்கி தற்போது வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் தான் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

எல்லாமே எதார்த்தமா இருக்கு

எல்லாமே எதார்த்தமா இருக்கு

ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு நடித்த சீரியல்களில் எல்லாம் நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருந்தார். இவர் என்ன மாதிரி நடித்தாலும் எங்களுக்கு பிடிக்குமே என்று ரசிக்கும் ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் இவருடைய காட்டில் நல்ல மழைதான். இவரது முதல் சீரியலில் அறிமுகமாகும்போது கிராமத்து பைங்கிளி ஆக பாவாடை தாவணியில் நடித்திருந்தார். முதல் சீரியலில் தனக்கென்று பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையும் பெற்று விட்டார். பார்த்ததும் பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் இவருடைய தோற்றமும் எதார்த்தமான நடிப்பும் பலருக்கும் பிடித்துவிட்டது.

ஜீ தமிழில் முள்ளும் மலரும்

ஜீ தமிழில் முள்ளும் மலரும்

முள்ளும் மலரும் சீரியலுக்கு பிறகு இவர் மின்னலே, செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த சீரியலில் எல்லாம் இவர் நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருந்தாலும் வீட்டு பெண்கள் இவரை கழுவிக் கழுவி ஊற்றி வந்தனர். ஆனால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் இவருக்கு ஆண் ரசிகர்கள் பெரிய அளவில் அதிகரித்து விட்டனர். சீரியல் நடிகைகள் பலர் இன்ஸ்டாகிராமில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும் இவர் அதில் கொஞ்சம் ஸ்பெஷலாக தான் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தன்னுடைய ரீல்ஸ் வீடியோக்களினாலும், டிக் டாக் வீடியோக்களினாலும் அனைவருக்கும் பரிச்சயமான இவருடைய முகம் ஒரு நாள் வரவில்லை என்றாலும் ரசிகர்கள் தேட ஆரம்பித்து விடுகின்றனர்.

சமையலிலும் அசத்தல்

சமையலிலும் அசத்தல்

சீரியல்களில் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ வான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவர் ஒரு கன்டஸ்டன்ட் ஆக கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையை நிரூபித்து இருந்தார். அதில் இவரும் புகழும் செய்யும் சேர்ந்து செய்த காமெடிகளும் வைரலாக பரவி வந்தது. இந்த நிகழ்ச்சி மூலமாகவும் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக கிடைத்து விட்டனர். தற்போது இவர் ருத்ரதாண்டவம் என்னும் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால் அதில் பல பிரச்சனைகள் கிளம்பிக் கொண்டே இருப்பதால் திரைப்படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

இன்னும் ஏதாவது இருக்கா?

இன்னும் ஏதாவது இருக்கா?

சரி திரைப்படம் எப்போது வேண்டுமானாலும் வெளியாகட்டும் அது வரைக்கும் ரசிகர்களின் மனதினை விட்டு நம்ம முகம் மறைந்து விடக் கூடாது என்று நினைத்துவிட்டாரோ என்னவோ ஒரே காஸ்ட்யூமில் பல போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார். அதனை ஒவ்வொன்றாக இவர் தற்போது ஒரு வாரமாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்து கொண்டிருக்கிறார். இதே பாவாடை தாவணியில் இவருடைய போட்டோக்களை தினமும் பார்த்துக் கொண்டிருந்தாலும் சலிக்கவில்லை இன்னும் ஏதாவது இருக்கிறதா? என்று ஆர்வமாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதுவும் தற்போது ஆலமர விழுது பிடித்து தொங்கியபடி இவர் நிற்கும் போஸ் பார்த்து ரசிகர்களின் மனது ஆடி போய்விட்டதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+