மிரட்டலான புது அவதாரம் எடுத்திருக்கும் தர்ஷா குப்தா..இனி ரவுடிங்க பாடு திண்டாட்டம் தான் போல!!
சென்னை: நடிப்பில் விஜயசாந்திக்கு டஃப் கொடுக்கும் வகையில் மிரட்டலாக களம் இறங்கி இருக்கும் தர்ஷா குப்தாவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள்.
குடும்ப பாங்காகவும் கவர்ச்சியாகவும் போட்டோக்கள் வெளியிட்டு வந்த தர்ஷா குப்தா தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோக்கள் பார்ப்பவர்களை கொஞ்சம் மிரள தான் வைத்திருக்கிறதாம்.

ஜீ தமிழில் அறிமுகம்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் எனும் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்த தர்ஷா ஆரம்பத்தில் மாடலின் மூலமாகத்தான் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தேடிக் கொண்டிருந்தார். முதல் சீரியலில் கிராமத்து பெண்ணாக அறிமுகமான தர்ஷா குப்தா சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் அதில் அதிகமான ரசிகர்களை தன்னை ஃபாலோ செய்யும் படி இவர் க்யூட்டான நடிப்பு மூலம் கலக்கி இருந்தார்.

ரசிகர்களின் கருத்து
டிக் டாக் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் பக்கங்களிலும் இவர் போட்டோ சூட் நடத்தி ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அடிக்கடி வந்து செல்கிறார்களாம். நடிகை ஷிவானியும் இவரும் ஒரே நேரத்தில் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிஸியாக இருந்தனர். ஷிவானி நான்கு மணிக்கு போஸ்ட் போட்டால் இவர் அதற்கு முன்பே போஸ்ட் போட்டு விடுவார், இவர்கள் இருவர் ரசிகர்களும் இவர்களுக்காக சமூக வலைதளத்தில் கருத்து மோதல்களை ஏற்படுத்தி வந்தனர்.

குக் வித் கோமாளி
முள்ளும் மலரும் சீரியலுக்கு பிறகு இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் வில்லியாக ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார். கடைசியாக செந்தூரப்பூவே சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தர்ஷாவுக்கு வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் இவருக்கு வேற லெவலில் ரசிகர்களை பெற்று கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் இவரும் புகழும் அடிக்கும் லூட்டிகளை பார்ப்பதற்காகவே ஒரு சிலர் நிகழ்ச்சியை பார்த்து வந்ததாக கூறி வந்தனர்.

மாஸ் ஆன புது கெட்டப்
போட்டோ சூட்டில் தன்னை அடிச்சிக்க யாராலும் முடியாது என்று இவர் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். ட்ரடிஷனல் உடையிலும், மார்டன் உடையிலும் இவர் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தை பல நேரங்களில் பரபரப்பாக்கி விடுகிறது. அதுபோலத்தான் தற்போது கூட மாஸ் ஆன கெட்டப்பில் அதுவும் போலீஸ் போல டைட்டு பேண்ட், சாட், ஷூ என மிரட்டி கொண்டு இருக்கும் இவர் கையில் பொருளோடு பெரிய வெல்டிங்கின் உச்சியில் நின்று கொண்டு வீடியோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் பொருளோடு வந்திருக்கும் தர்ஷாவை பார்த்தால் இனி ரவுடிகள் எல்லாம் மிரண்டு போய்விடுவார்கள் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications