தேவயானியால் நான்தான் நிறைய இழந்துட்டேன்.. என் பொண்ணுங்க கூட இப்படி கேக்குறாங்க! ராஜகுமாரன் வருத்தம்
சென்னை: இயக்குனர் ராஜகுமாரன் சமீபத்தில் பேசி வரும் விஷயங்கள் சர்ச்சையாகி வரும் நிலையில், அவர் தன்னுடைய மனைவி தேவயானி பற்றியும் இப்போது பேசியிருக்கிறார். நான் இயக்குனராக இருந்தாலும் தேவயானி புருஷன் என்று எல்லோரும் சொல்லுறாங்க.. தேவயானியால் நான் தான் நிறைய இழந்துட்டேன் என்று ராஜகுமாரன் வருத்தமாக பேசி இருக்கிறார்.
இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக இருந்த ராஜகுமாரன் தேவயானி நடித்த நீ வருவாய் என படத்தின் மூலமாக இயக்குனர் ஆனார். அந்த படம் அவருக்கு ஒரு அளவிற்கு பெயரை வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய நான்கு படங்களில் தேவயானி தான் கதாநாயகியாக நடித்திருந்தார்.

நடிக்கும்போது ஏற்பட்ட காதலால் தேவயானியை பல எதிர்ப்பையும் மீறி ராஜகுமாரன் திருமணம் செய்திருந்தார். சமீபகாலமாக ராஜகுமாரன் எந்த படத்தையும் இயக்கவில்லை. ஆனால் நடிகர் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் தான் ஒரு காமெடியனாக நடித்திருந்தார். 90ஸ் கிட்ஸ்களுக்கு இவரை இயக்குனராக தெரிந்திருந்தாலும் 2கே கிட்ஸ்களுக்கு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் டிரெயினில் ராஜ்- ஆக நடித்த ராஜகுமாரன் காட்சிகள் தான் நினைவிற்கு வரும்.
அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக ராஜகுமாரன் பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அதில் தனக்கு குடும்ப பாங்கான கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் தான் பிடிக்கும், இயக்குனர் வெற்றிமாறன் படங்கள் சுத்தமா பிடிக்காது என்று கூறியிருக்கிறார். வெட்டு, குத்து, ரத்த களரி என்று கதை எடுத்து வைத்தால் இன்றைய சமுதாயமும் இது போன்ற படத்தை பார்த்து சீரழிந்து விடாதா? சமுதாயத்தில் நல்ல கருத்துள்ள படங்களை கொடுத்தால் தானே மக்களுடைய மனநிலை நல்லதாக இருக்கும்.
இதுபோன்று வன்முறை நிறைந்த படங்களை கொடுக்கும் போது மக்களுடைய மனதிலும் வன்முறை தானே வந்து கொண்டிருக்கிறது என்று ராஜகுமாரன் பேசி இருக்கிறார். அதோடு அவர் இயக்குனர் மகேந்திரன் பற்றி பேசியது பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படியான சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ராஜகுமாரன் பேசும்போது தன்னுடைய மனைவி தேவயானி பற்றியும் பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசும்போது, தேவயானி எப்படி இவரை கல்யாணம் பண்ணுனாங்கன்னு மட்டும் கேக்குறீங்களே? ஆனா தேவயானியை ஒரு ராணியாகவே வைத்திருக்க நான் எவ்வளவு இழந்திருப்பேன் என்று ஏன் யாரும் யோசிக்க மாட்டேங்கிறீங்க? நான் ஒரு இடத்திற்கு வாய்ப்புக்கு கதை சொல்ல போய் இருப்பேன், என்னடா தேவயானி புருஷன் தினமும் வராருன்னு சொல்லிடுவாங்கன்னு போக மாட்டேன்.
விஜய், அஜித் எனக்கு நல்ல நண்பர்கள் தான். ஆனால் அவர்களை போய் பார்த்தால் தேவயானி கணவர் வந்து கெஞ்சிட்டு இருக்காருன்னு சொல்லுவாங்கனு யோசிச்சு அதெல்லாம் விட்டு இருக்கிறேன் என்று தனக்கு இருக்கும் வருத்தத்தையும் ராஜகுமாரன் பேசி இருக்கிறார். அதுபோல சமீப காலமாக இவர் பேசுவது சர்ச்சையாகி வரும் நிலையில் அது குறித்து தன்னுடைய மகள் இனியா தன்னிடம் கேட்டது பற்றியும் ராஜகுமாரன் பேசியிருந்தார்.
Devayani: பெண்கள் உடையில் கண்ணியம் வேண்டும்! நமக்குன்னு கலாச்சாரம் இருக்கு! ஓபனா பேசிய தேவயானி
அதாவது சமீப காலமாக என் பேட்டி எல்லாம் பாத்துட்டு தொடர்ந்து என்னை பத்தி தப்பு தப்பா வர செய்திகளை எல்லாம் என்னுடைய பொண்ணு பார்த்து இருக்காங்க. என்னப்பா உங்களை பற்றி இப்படி எல்லாம் தப்பு தப்பா எழுதிட்டு இருக்காங்கன்னு கேட்டா. அதுக்கு நான் தவறாக பேசுற.. தவறாக எழுதுறவங்க பக்கத்தில் நீ எப்படி இருக்க? அது தப்பில்லையா? என்று என் பொண்ணு கிட்ட திருப்பி கேட்டேன். அவளுக்கு இதையெல்லாம் நாம பார்க்க கூடாது இடம் என்று அதற்கு பிறகு புரிஞ்சுடுச்சு என்று ராஜகுமாரன் கூறியிருக்கிறார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications