குழந்தை பிறந்ததை எப்படி கணவரிடம் மறைக்க முடியும் "அந்த மார்க்” அர்னாவ் குற்றசாட்டுக்கு திவ்யா பதில்
சென்னை: சின்னத்திரை நடிகை ஆன திவ்யா ஸ்ரீதர் தன் கணவரும் நடிகருமான அர்னாவ் குற்றசாட்டுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
திவ்யாவுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதை என்னிடம் மறைத்து தான் திருமணம் செய்திருந்தார் என்று அர்னாவ் குற்றம் சாட்டியுள்ளார்.
குழந்தை பிறந்ததை எப்படி கணவரிடம் ஒரு பெண்ணால் மறைக்க முடியும் எனக்கு ஆபரேஷன் செய்திருப்பதால் அந்த மார்க் அப்படியே இருக்கிறது என்று திவ்யா பதில் கொடுத்திருக்கிறார்.

காதல் திருமணம்
கேளடி கண்மணி சீரியலில் நடித்து வந்த திவ்யாவுக்கும் அவரோடு நடித்த நடிகர் அர்னாவ்வுக்கும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்திருக்கிறது. திருமணத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் ஐந்து வருடங்கள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திவ்யா முஸ்லிம் மதத்திற்கு மாறி அர்னாவ்வை திருமணம் செய்து இருக்கிறார். அர்னாவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

திவ்யாவின் குற்றசாட்டு
திருமணத்திற்கு முன்புவரைக்கும் இவர்களுடைய வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாகத்தான் சென்று கொண்டிருந்ததாம். சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தாலும் அதை அவர்களே பேசி தீர்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள். ஆனால் திருமணம் ஆன பிறகு தான் இவர்களுக்குள் பெரிய பூகம்பமே வெடித்திருக்கிறது. தற்போது திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கும் நிலையில அர்னாவ் முன்பு மாதிரி சரியாக பேசவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் திவ்யா மற்றும் அர்னாவ் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சீரியலில் அர்னாவ்வுடன் நடிக்கும் நடிகைக்கும் இவருக்கும் தப்பான உறவு இருப்பதாக திவ்யா குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.

ரகசியமான திருமணம்
அர்னவ் மற்றும் திவ்யா இருவரும் திருமணம் செய்து கொண்டதை ரகசியமாகத்தான் வைத்திருந்திருக்கின்றனர். திருமண விஷயத்தை இப்போதைக்கு யாரிடமும் கூற வேண்டாம் என்று இவர்கள் இருவரும் பேசி தான் திருமணம் செய்திருந்தார்களாம். ஆனால் திவ்யா இப்போது கர்ப்பமாக இருப்பதால் திருமணம் ஆன செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஆனால் அடுத்த நாளே அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தையும் டெலிட் செய்து விட்டார். அதே நேரத்தில் அது விளம்பரத்திற்காக எடுத்தது என்று அர்னாவ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தெளிவுபடுத்தி இருந்தார்.

மாறி மாறி குற்றச்சாட்டு
தற்போது ஒரு சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் தனது திருமண புகைப்படங்கள் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியோடு திவ்யா பதிவிட்டிருந்தார். இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் அர்னாவ் அடித்துவிட்டார் என்றும் அதனால் தன்னுடைய வயிற்றில் அடிபட்டு ப்ளீடிங் ஆகி கொண்டு இருக்கிறது என்று மருத்துவமனையில் இருந்தபடி வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் திவ்யா தன்னை ஏமாற்றி தான் திருமணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு முதல் கணவரோடு குழந்தை இருந்த செய்தி என்னிடம் சொல்லவே இல்லை. சூட்டிங் ஸ்பாட்டுக்கு அந்த குழந்தையை கூட்டிக் கொண்டு வரும்போது எல்லாம் என்னுடைய அக்கா குழந்தை என்று தான் கூறியிருந்தார். திருமணத்தின் போது தான் டாக்குமெண்டில் அது அவருடைய குழந்தை என்பதை நான் பார்த்தேன் என்று கூறியிருந்தார்.

இது கூட தெரியாதா
அர்னாவ் கூறிய குற்றச்சாட்டு எல்லாமே பொய். நாங்கள் ஒன்றாக ஐந்து வருடங்கள் வாழ்ந்து இருக்கிறோம். அப்போது எப்படி என்னுடைய குழந்தையை நான் இல்லை என்று சொல்லி ஏமாற்ற முடியும் அதுவும் கேளடி கண்மணி சீரியலில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு வயதாக இருக்கும் என் குழந்தையும் அம்மாவும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார்கள். எல்லோருக்குமே தெரியும் இது என்னுடைய குழந்தை என்று. அதுமட்டுமல்லாமல் இணையதளத்தில் என்னைப் பற்றி தேடினாலே எனக்கு முதல் திருமணம் முடிந்ததும் ஒரு குழந்தை இருப்பதும் தெரியும். அதனால் தான் தற்போது இரண்டாவது திருமணம் முடிந்த போது கூட அதை பல வீடியோக்களில் குறிப்பிட்டு இருந்தனர். அது மட்டும் அல்லாமல் கணவனிடம் ஒரு மனைவியால் எப்படி தான் குழந்தை பிறந்தது என்பதை மறைக்க முடியும். எனக்கு ஆபரேஷன் செய்து இருக்கிறது அந்த மார்க் கூட இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications