எதிர்நீச்சல் கரிகாலனுக்கு இத்தனை சோகங்களா? காலேஜ் ப்ரொபஸர் ஆக இருந்து நடிகராக மாறிய காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் கரிகாலன் கேரக்டரில் நடிக்கும் நடிகரின் பெயர் விமல் குமார் தானாம்.

சீரியல் நடிகர் விமல் ஆரம்பத்தில் ஒரு காலேஜ் ப்ரொபஸராக வேலை பார்த்திருக்கிறார்.

கிரிக்கெட்டில் பெரிய சாதனை செய்ய வேண்டும் என்று காத்திருந்த எதிர் நீச்சல் கரிகாலன் பின்பு ஒரு நடிகராக மாறிய சுவாரசியமான தகவல்களை பற்றி அவரே கூறி இருக்கிறார்.

 எதிர்நீச்சல் கரிகாலன்

எதிர்நீச்சல் கரிகாலன்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டே வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் உருவாக தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் சீரியலில் பெரிய அளவில் வசனம் பேசாவிட்டாலும், தன்னுடைய முகத்தை காட்டிவிட்டுளே ரசிகர்கள் சிரிக்க வைத்து விடும் ஒரு கேரக்டராக கரிகாலன் இருந்து வருகிறார். இவர் உடைய என்ட்ரி எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து வருகிறார்கள். அந்த அளவிற்கு ஒரு சில எபிசோடுகள் மட்டும் வந்தாலும் இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பு மற்றும் தனித்துவமான பாடி லாங்குவேஜ் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

நிஜப்பெயர்

நிஜப்பெயர்

எதிர்நீச்சல் கரிகாலனின் நிஜப்பெயர் விமல் குமார் தானாம் இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து கரிகாலனை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகர் விமல் என்றால் யாருக்கும் தெரியாமல் இருந்தாலும் எதிர்நீச்சல் கரிகாலன் என்று சொன்னால் தற்போது பலருக்கும் பெரிய தொடங்கிவிட்டது. இவர் வெளியே செல்லும் இடங்களில் கூட இவருக்கு அதிகமான வரவேற்பு இந்த சீரியலின் மூலமாக தனக்கு கிடைத்து வருவதாக இவர் நெகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார். இந்த இடத்திற்கு வருவதற்காக தான் ஆரம்பத்தில் இருந்து எவ்வளவோ கஷ்டங்களை தாண்டி வந்திருக்கிறேன் என்றும் உருக்கமாக பேசியிருக்கிறார்.

காலேஜ் ப்ரோபோசர்

காலேஜ் ப்ரோபோசர்


அந்த வகையில் தற்போது வரைக்கும் இவரை எதிர்நீச்சல் கரிகாலன் என்று தான் அனைவருக்கும் தெரியுமா ஆனால் இவர் சொந்த ஊர் திருநெல்வேலி தானாம். இவர் திருநெல்வேலியில் அண்ணா யுனிவர்சிட்டியில் ப்ரோபோசராக ஒரு வருடம் ஒர்க் பண்ணி இருக்கிறாராம். இவர் BE ஸ்டூடண்டுகளுக்கு கிளாஸ் எடுத்து இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து இவருடைய வீட்டில் இவர் கவர்மெண்ட் வேலைக்கு செல்ல வேண்டும் என்று தான் இவர் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறார். ஆனால் விமல் குமாருக்கு ஆரம்பத்தில் இருந்தே கிரிக்கெட்டில் தான் அதிகமாக இன்ட்ரஸ்ட் இருந்திருக்கிறது. கிரிக்கெட் மீது இவருக்கு இருந்த ஆசையினால் தான் இவர் காலேஜ் லட்சராக மாறி இருக்கிறார். இவருடைய நண்பர்கள் கூட இவரை நெல்லை எக்ஸ்பிரஸ் விமல் குமார் என்று தான் கூறிக் கொண்டிருப்பார்களாம். அந்த அளவிற்கு இவர் வேகமாக பந்து வீசுவாராம்.

ஆல் இந்தியா வானொலியில் வேலை

ஆல் இந்தியா வானொலியில் வேலை

அதே நேரத்தில் இவருக்கு வயது அதிகமாக தொடங்கிய பிறகு தான் இவருக்கு தன்னால் டி என் பி எல், ஐபிஎல் குள்ள போவதற்கு வயதை கடந்து விட்டோம் என்பதை தெரிந்து கொண்ட பிறகுதான் இவர் காலேஜில் மாணவர்களோடு விளையாடலாம் என்று வேலைக்கு சேர்ந்தாராம் , அதே நேரத்தில் மீடியாவில் இவர் பார்ட் டைம் ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாராம். அப்போது தான் இவருடைய அப்பா இவருக்கு ஆல் இந்தியா வானொலியில் ஆர் ஜே வாக வேலைக்கு அப்ளிகேஷன் வாங்கி கொடுத்திருக்கிறார்.அதில் இவர் செலக்ட் ஆகி இருக்கிறார். திருநெல்வேலியில் ஆல் இந்தியா வானொலியில் இவர் ஆர்.ஜேவாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது முக்கியமான பிரபலங்களின் மரணத்திற்கு இவர் இரங்கற்பா எழுதுவாராம். அப்போது அங்கே இருந்தவர்கள் இவரிடம் துர்தர்ஷனில் ஒரு கவிதை போட்டி நடக்கிறது அதில் கலந்து கொள்ள கூறி இருக்கிறார்கள்.

போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு

போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு


அந்த கவிதை போட்டியில் விமல் குமாரும் கலந்துகொண்டு இவர் எழுதிய கவிதைக்கு நான்காயிரம் பரிசு தொகை கிடைத்திருக்கிறது. இவர் அவரே எழுதிய கவிதை என்பதால் அதை மனப்பாடமாக கூறியிருக்கிறார். அதனால் இவரை துர்தர்ஷனில் ஆங்கரிங் பண்றீங்களா என்று கேட்டார்களாம் இவரும் சரி என்று அங்கே வேலை செய்திருக்கிறார். அதற்குப் பிறகு ஆர்ஜே, விஜே என்று இவர் 300க்கும் மேற்பட்ட இன்டர்வியூஸ் எடுத்து இருக்கிறாராம். அந்த நேரத்தில் பண விஷயத்தில் அதிகமாக கஷ்டத்தில் தான் இருந்திருக்கிறார். வீட்டில் இருந்தும் இவர் தான் சினிமாவில் நடிக்கப் போவதாகும் தன்னுடைய விருப்பத்தின் பேரில் தன்னுடைய வாழ்க்கையை நோக்கி செல்ல இருக்கிறேன் என்று கூறியதால் பெரிய அளவில் பணத்தை எதிர்பார்க்க முடியாமல் இருந்திருக்கிறார். ஆனால் ஒரு இன்டர்வியூ எடுக்க போகிறோம் என்றாலும் அதில் கிடைக்கும் பணம் சாப்பாட்டிற்கு சரியாக போய்விடுமாம் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்திற்காக இவர் போட்டோ சூட் எடுக்க வேண்டும் என்றால் கூட அதற்கு உடை விஷயத்திற்காக அதிகமான கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கிறதாம். அதற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்காக பல்வேறு போராட்டங்களை தாண்டி தான் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+