சக போட்டியாளர்களை சவுண்ட் போட்டு அதட்டும் அபிஷேக்...காண்டாகும் ரசிகர்கள்
சென்னை: சக போட்டியாளர்கள் இடம் அபிஷேக் நடந்துகொள்வது பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அதிருப்த்தியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
தன்னுடைய குரலை உயர்த்தி இவர் ஒவ்வொரு இடங்களிலும் கத்தி பேசுவது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டியாளர்களுக்குள்ளும் பிரச்சனைகளை தொடங்கியிருக்கிறது.
நேற்றைய எபிசோடில் இவர் பாவனியிடம் பேசியதை பார்த்து நெட்டிசன்கள் பலர் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

நெட்டிசன்களின் ஹீரோ
எவ்வளவோ வேலைகள் செய்து கேமரா தம்மை பார்க்க வைத்துக் கொண்டிருக்கும் அபிஷேக்குக்கு ரசிகர்கள் வாக்கு குறைவாக கொடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் தான் இப்படி செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். கடைசி வரைக்கும் இவருடைய பெயர் எலிமினேஷன் இல் இருந்தது இவருக்கு அதிகமான மன அழுத்தத்தை கொடுத்து இருக்கிறது ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இவர் செய்யும் செயல்கள் தான் நெட்டிசன்களையும் ரசிக்க வைத்திருக்கிறது என்று கூறிவருகின்றனர்.

பிரஷர் கொடுத்த கமல்ஹாசன்
இந்த வாரம் எலிமினேஷனில் இவர் வெளியே சென்று விடுவார் என்று முதலில் பயந்து கொண்டிருந்தாலும் பின்பு இவர் சேவ் ஆனதும் தன்னுடைய வேலையை காட்டத் தொடங்கிவிட்டார் என்று நெட்டிசன்கள் இவரைப் பார்த்து கலாய்த்து வருகின்றனர். என்னதான் இவருக்கு கமல்ஹாசன் பிரஷர் கொடுத்து கடைசியில் நீங்கள் சேவ் என்ற செய்தியைச் சொல்லி இருந்தாலும் ரசிகர்கள் இதனை எதிர்பார்க்கவில்லை என்று பலர் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் ஓட்டு வித்தியாசம் அதிக அளவில் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் எப்படி எல்லாம் மாறிப் போனது என்று பலர் தெரியாமல் குழம்பி வருகிறார்களாம்.
Recommended Video

சின்னப்பொண்ணுவிடம் செல்ல சண்டை
அபிஷேக் ராஜா இந்த சீசனில் நெட்டிசன்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் செய்யும் செயல்கள் எல்லாமே நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருந்தாலும் இவர் டிராமா நிகழ்ச்சி நடைபெறும் நாளில் சின்னப்பொண்ணு விடம் சீரியஸாக கத்தி பேசியதை பார்த்து சக போட்டியாளர்கள் பயந்து போய் விட்டனர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களும் இவருக்கு என்னதான் ஆச்சு என்று பதறிப் போய் விட்டனர். அந்த அளவிற்கு கத்திப் பேசினாலும் தன்னுடைய செண்டிமெண்டை போட்டுத் தாக்கி அதனை பூசிவிட்டார் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆக்ரோஷமான பேச்சு
இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் இவர் பாவனியிடமும் அதே பாணியை கையாண்டிருக்கிறார். இவர் பேசியது சம்பந்தமே இல்லை என்று பாவனி கூறிக் கொண்டிருந்தாலும் அவருடைய ரசிகர்கள் அபிஷேக்குக்கு எதிராக கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் நல்ல செல்வாக்கு பெற்றிருக்கும் பாவனி ரெட்டியிடம் அபிஷேக் நடந்து கொண்டது தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. என்ன இருந்தாலும் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசி வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை என்று பல கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் என்னதான் இவர் பேசினாலும் அது அடுத்தவர்களுக்கு புரியுனுமே!!??என்று பலர் கலாய்த்து வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications