ஹார்ட்பீட் வெப் சீரிஸ் நடிகரின் கல்யாணத்திற்கு வந்த இளையராஜா.. ஒய்ஜி மகேந்திரன் ரியாக்ஷன்! குவியும் வாழ்த்து
சென்னை: டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ஹார்ட்பீட் வெப் சீரிஸில் நடித்த நடிகர் ராமுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த ஃபங்ஷனில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியல் நடிகரும் ஹார்ட்பீட் வெப் சீரிஸ் நடிகருமான ராமிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இசையமைப்பாளர்கள் இளையராஜாவின் பாடல்கள் எந்த அளவிற்கு பலருக்கும் மனதிற்கு இதம் கொடுக்கிறதோ அதேபோல அவருடைய செயல்கள் எல்லாமே பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்துகிறது. இளையராஜா பேசுவது சில நேரங்களில் ட்ரோல் செய்யப்படுகிறது. ஒரு சில நேரங்களில் இவருக்குள் இப்படி ஒரு கேரக்டர் இருக்கிறதா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு தான் நடந்து கொள்கிறார். அதாவது சமீபத்தில் சீரியல் நடிகர் ராமின் கல்யாணத்தில் இளையராஜா செய்த செயலை தான் இப்போது இணையத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அதாவது ராம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் சீரியலில் கதாநாயகனின் தம்பியாக நடித்திருந்தார். அதுவும் துணை கதாநாயகன் போலத்தான் அந்த கேரக்டர் இருந்தது. அந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. அந்த சீரியலுக்கு பிறகு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ஹார்ட் பீட் வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். இந்த சீரியஸில் நவீன் என்ற கேரக்டரில் பலருடைய மனதை கவர்ந்த இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்று இருக்கிறது.
இவருடைய திருமணம் எளிமையாக நடைபெற்றாலும் ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெற்று இருக்கிறது. அதில் பல திறை பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக இவருடன் ஆஹா கல்யாணம் சீரியலில் நடித்த நடிகைகள், நடிகர்கள் மற்றும் ஹார்ட்பீட் வெப் சீரிஸில் நடித்த நடிகர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.
அப்போது இசை அமைப்பாளர் இளையராஜாவும் வந்திருந்தார். இளையராஜாவை பார்த்ததும் மணமக்களின் பெற்றோர் இளையராஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அதற்கு இளையராஜா அப்படி எல்லாம் பண்ண வேண்டாம் என்பது போல தடுத்து இருக்கிறார். பிறகு அவர் சென்றதும் அடுத்தடுத்த பல பாடகர்களும் இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக நடிகர் ஒய் ஜி மகேந்திரனும் கலந்து கொண்டார். அவர் மணமக்களிடம் திருமண வாழ்க்கையில் ஒற்றுமையாக வாழ்வதற்காக சில அட்வைஸ்களையும் கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோவை ராம் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர இது இப்போ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு பல பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கின்றனர். அதிலும் நடிகர் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி ரவியும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அதுபோல சில ரசிகர்கள் நவின் ஹார்ட் பீட் ரசிகைகளின் மனதை உடைத்து விட்டாரே என்று கலாய்ப்பது போல கமெண்ட் கொடுத்திருக்கின்றனர். இன்னும் ஒரு ரசிகர் ராம் வெளியிட்ட வீடியோவில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தி இருக்கிறார். அதனால் பார்த்து ப்ரோ உங்ளிடமும் இளையராஜா சார் காப்பி ரைட் கேக்க போறாரு என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications