போட்டியினா வருவேன் பஸ்ட்டா... பாட்டு விடுவேன் பெஸ்டா.. மிரட்டும் இசைவாணி
சென்னை: இசைவாணி லேட்டஸ்டாக வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Recommended Video
மீண்டும் அவருடைய பணி சிறப்பாக தொடங்கிவிட்டது என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
பாட்டில் இருக்கும் எனர்ஜியையும், அர்த்தத்தையும் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்களாம்.

இசை வாணியின் லேட்டஸ்ட் பாடல்
கானா பாடகியான இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தன்னுடைய பணியைத் தொடங்கி விட்டார். அவருடைய அசத்தலான பாடலை கேட்டு ரசிகர்கள் பலர் மெய்மறந்து போயிருக்கின்றனர். அனல்பறக்கும் வார்த்தைகள் மட்டுமல்லாமல் இசையோடு இசை வாணியின் பர்பாமன்ஸ் வேற லெவல் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இசைவாணியின் பாடலை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடவும் அந்த வீடியோக்கள் செம வைரலாக சோசியல் மீடியாக்களில் கலக்கி வருகிறது.

மிஸ் பண்ணும் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு தன்னுடைய பாட்டு திறமையால் பலருக்கும் பரிச்சயமாக இருந்த இசைவாணி இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து தன்னுடைய முயற்சியால் மட்டுமல்லாமல் பாடல் திறமையாலும் இன்று பலருக்கும் பரிச்சயமான நபராக மாறி இருக்கும் இசைவாணியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியதால் ரசிகர்கள் பலர் மிஸ் பண்ணி வருகின்றனர்.

ரசிகர்களின் அறிவுரை
இசைவாணி க்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பல ரசிகர்கள் மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து கொண்டு இருந்தனர். ஆனால் பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி எல்லாம் உங்களுக்கு வேண்டாம் உங்களுடைய திறமையை பாடலில் காட்டுங்கள் வேற லெவல் உங்களுடைய வளர்ச்சி இருக்கும் என்று இவருக்கு ஆசீர்வாதங்களை அளித்து வந்தனர். தற்போது தான் பட்ட கஷ்டங்கள் மட்டுமல்லாமல் தன்னுடைய அனுபவங்களையும் சொல்லும்விதமாக மீண்டும் இசைவாணி ஒரு பாடலை பாடத் தொடங்கி உள்ளார்.

தத்துவம் பொங்கும் பாடல்
தன்னுடைய கணீர் குரலால் "போட்டியினா வருவேன் ஃபர்ஸ்ட்டா.. பாட்டை விடுவென் ரொம்ப பெஸ்ட்டா.. எதுக்கும் அசர மாட்டேன் மைக்கை புடிச்சிட்டா.. இருந்தேன் வறுமையில வளர்ந்து வந்தேன் திறமையில, நிறைய பேரு ஆடுறீங்க பெருமையில.. கஷ்டப்பட்டு வளர்ந்து வந்தா லைஃப் ஆகும் பிரைட்டா..எந்த பொண்ணு பத்தி தப்பா பேசி ஆகாதுங்க அவுட்டா. .. என்று தத்துவம் பொங்க இசை வாணியின் லேட்டஸ்ட் பாடல் தான் தற்போது சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இவருடைய இந்த பாட்டு வெற்றி அடைய அவருடைய ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications