சிவகார்த்திகேயனை விடுங்க, ஜனநாயகன் தள்ளி போனதும் ரவி மோகன் பதிவு! ஓபனா சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'ஜனநாயகன்' திரைப்படம், பொங்கலுக்கு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்சார் சிக்கல் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருப்பது விஜய் ரசிகர்களை கடும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த திடீர் ஒத்திவைப்புக்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ச்சியாக பதிவிட்டு வரும் நிலையில், தற்போது தமிழ் திரையுலகிலிருந்து நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வெளியிட்ட பதிவு, பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரவி மோகன் தனது சமூக வலைதளப் பதிவில், "Heartbroken 💔 Vijay Anna.. as a brother I'm standing with you as one among the millions of brothers beside you. You don't need a date.. you are the opening. Whenever that date is.. Pongal only starts then" என பதிவிட்டுள்ளார். இந்த உருக்கமான வார்த்தைகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
இந்த போஸ்டில் உள்ள ஸ்பெஷல் என்னவென்றால், பொங்கலுக்கு விஜய்க்கு எதிராக வெளியாகவுள்ள 'பராசக்தி' திரைப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். நேரடி போட்டி நிலவி வரும் சூழலில் கூட, எந்த அரசியல் அல்லது எதிர்ப்புகளையும் பார்க்காமல், விஜய்க்கு ஆதரவாக துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார் என்பதாலேயே, பலரும் ரவி மோகனை பாராட்டி வருகின்றனர்.
'ஜனநாயகன்' திரைப்படம், விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ஒரு முக்கிய அரசியல் பின்னணியுடைய படம் என்பதால், இதன் வெளியீடு குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகமும் ஆவலுடன் காத்திருந்தது. ஆனால் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சென்சார் நடைமுறை தாமதங்கள், கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே முன்பதிவுகள் பல மையங்களில் தொடங்கப்படாமலும், தியேட்டர் ஒதுக்கீடுகளிலும் குழப்பம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ரவி மோகனின் பதிவில், மனம் உடைந்தது விஜய் அண்ணா, ஒரு சகோதரனாக.. உங்களுடன் கோடிக்கணக்கான சகோதரர்களில் ஒருவராக நிற்கிறேன். உங்களுக்கு ஒரு தேதி தேவை இல்லை, நீங்கள் தான் தொடக்கம். அந்த தேதி எப்போது வந்தாலும் பொங்கல் அப்போதுதான் தொடங்கும் என்று விஜய்க்கு சப்போர்ட் கொடுத்திருப்பது ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.
இதற்கிடையில், ஜனநாயகன் ஒத்திவைப்பு தொடர்பாக பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள், சென்சார் நடைமுறைகளின் கடுமை குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், ரவி மோகனின் ஆதரவு பதிவு, இந்த விவகாரத்தை மேலும் பெரிய விவாதமாக மாற்றியுள்ளது.
பொங்கல் பண்டிகை காலத்தில் வெளியாக வேண்டிய பெரிய படங்கள் தொடர்ச்சியாக சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், 'ஜனநாயகன்' எந்த தேதியில் வெளியாகும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
-
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications