விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி பேசப்பட்டு வருகிறார். சினிமா, அரசியல், குடும்ப வாழ்க்கை என பல விஷயங்கள் ஒன்றாக சேர்ந்து அவரைச் சுற்றி விவாதங்களை உருவாக்கி விட்டது.
விஜய் தற்போது முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அதனால் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் அவர் முன்பே தெரிவித்திருந்தார். அவர் நடித்த கடைசி படமாகக் கூறப்படும் ஜனநாயகன் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் சில சென்சார் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக அந்த படம் இன்னும் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் காரணமாக, தேர்தல் முடிந்த பிறகு தான் அந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதற்கிடையில் விஜயைச் சுற்றி பல சர்ச்சைகளும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கின்றன. கடந்த ஆண்டு நடந்த கரூர் சம்பவம் முதல் சமீபத்திய விவகாரங்கள் வரை பல விஷயங்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதோடு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக வெளியான தகவலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவாகரத்து விவகாரம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான் இன்னொரு சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விஜய் நடிகை த்ரிஷா உடன் சேர்ந்து கலந்து கொண்டார். இருவரும் ஒரே காரில் வந்ததாகவும், ஒன்றாகவே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் வெளியான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த சம்பவங்களையெல்லாம் வைத்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களையும் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர். சிலர் விஜயை ஆதரித்து பேசினாலும், சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் விஜயின் குடும்பத்தை பற்றியும் அதிகமாக பேசப்படுகிறது. குறிப்பாக அவரது மகன் ஜேசன் சஞ்சய் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தற்போது பல விமர்சனங்களை சந்தித்து கொண்டிருந்தாலும், அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஜேசன் சஞ்சய் தனது கவனத்தை முழுவதும் சினிமாவிலேயே வைத்திருக்கிறார் என்று அவருக்கு நெருங்கியவர்கள் கூறியுள்ளனர்.
அப்பாவைப் போல நடிகராக வராமல், தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் எடுத்த பாதையைப் போல இயக்குநராக தான் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் ஜேசன் சஞ்சய். அவர் இயக்கிய முதல் படம் சிக்மா தற்போது தயாராகி வருகிறது. இந்த படம் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆக்ஷன் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பது தமன். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படம் இன்னும் வெளியாகாத நிலையில், ஜேசன் சஞ்சய் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது இரண்டாவது படத்தை பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் ஜீவா நடித்த வெற்றி படத்தை தயாரித்தவர்.
அதாவது ஒரு பக்கம் விஜய் மீது பல சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் அவரது மகன் ஜேசன் சஞ்சய் எந்த விவாதங்களையும் கவனிக்காமல் தனது சினிமா பயணத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
இதனால் "விஜய்க்கு அரசியல் மற்றும் குடும்ப பிரச்சனைகள் ஒரு பக்கம் இருக்க, மகன் சஞ்சய் வேறு வழியில் தனது கேரியரை அமைத்துக் கொண்டு செல்கிறார்" என்று சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களிடமும் பேசப்பட்டு வருகிறது.
-
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
விஜய் வேட்பு மனு பெரம்பூரில் தள்ளுபடி செய்யப்படுமா? சட்ட ரீதியாக விஜய்க்கு உள்ள வாய்ப்பு என்ன? -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்?












Click it and Unblock the Notifications