குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆன நிலையில்... கலக்கப்போவது யாரு நவீன் வெளியிட்ட உருக்கமான பதிவு
சென்னை: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமான நவீனுக்கு தற்போது தான் ஒரு வாரத்திற்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.
பல வருடங்களாக குழந்தை இல்லாமல் ஏக்கத்தில் இருந்த நவீன் இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களோடு பகிர்ந்து இருந்தார்.
தற்போது ஒரு வாரம் ஆன நிலையில் தன்னுடைய குழந்தையை பற்றி தன்னுடைய அன்பை உருக்கமாக பதிவில் வெளியிட்டு இருக்கிறார்.

கஷ்டத்தை மறக்க வந்தவர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாவம் கணேசன் சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த நவீன் தற்போது ஒரு குழந்தைக்கு அப்பாவாக மாறி இருக்கிறார். தன்னுடைய காமெடியின் மூலமாக கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரையும் வாய் விட்டு சிரிக்க வைத்த இவர் வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்து வந்துள்ளாராம். தான் கடந்து வந்த கஷ்ட காலங்களை மறக்க வைக்க தன்னுடைய இளவரசி வந்துவிட்டார் என்று மகிழ்ச்சியோடு குழந்தை பிறந்த செய்தியை கூறும் போது பதிவு வெளியிட்டு இருந்தார்.

மாறிப்போன ஏக்கம்
நவீனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து முடிந்து விட்டதாம். இந்த நிலையில் தான் இவர் காதலித்து கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து இருந்தாராம். தற்போது இந்த ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் முடிந்து ஒரு சில ஆண்டுகள் இவருக்கு குழந்தை இல்லாமல் இருந்த நேரத்தில் பலரும் இவர்களுக்கு இனி குழந்தை இருக்காது. அதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று இவர்கள் காதுப்படவே பேசி சிரித்தார்களாம். இந்த நிலையில் அந்த அவப்பெயர்களை தன்னுடைய மகள் தீர்த்து விட்டாள் என்று கூறி இருக்கிறார்.

இனி மகிழ்ச்சிதான்
பெண் குழந்தைகள் என்றால் எப்போதுமே தந்தைக்கு தனி பாசம் தான் அதுவும் பல வருடங்கள் காத்திருந்து கிடைத்த குழந்தையை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சி தழுவி இருக்கிறார் நவீன். இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாசைகள் எதுவும் தேவையில்லை. வெல்கம் மை ப்ரொட்ஃபுல் டாட்டர், இவள் பிறந்து ஒரு வாரம் ஆகிறது. அவள் பிறந்து ஒரு வாரம் ஆகிறது என்று தன்னுடைய குழந்தையையும் மனைவியையும் கூறி இருக்கிறார். அதோடு அவளது 24/7 தாயும் மகளும் பெரும் போராட்டத்திற்கு பிறகு நன்றாக இருந்தனர்.மனைவியும் என் மகளும் பிறந்த நேரத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கவில்லை. அவர்கள் வெற்றி பெற்று என்னை ஒரு பெருமைமிக்க தந்தையாக ஆக்கினார்கள் என்று உணர்ச்சி பூர்வமாக பதிவிட்டு இருக்கிறார்.

உண்மையான வார்த்தைகள்
மேலும் என் ஆத்ம தோளருக்கு நன்றி என்று தன்னுடைய மனைவியான கிருஷ்ணகுமாரியை டேக் செய்திருக்கிறார். மற்றும் என்னுடைய மகள் என் குட்டி ஸ்லீப்லெஸ் நைட்ஸ்& களைப்புடன் என் நாளையும் இரவையும் அனுபவித்து மகிழ்கிறேன். ஆனால் நான் முழுவதும் அவளை பார்ப்பதற்கும், இரவு முழுவதும் அவளுடன் இருப்பதற்கும் ஒரு பொருட்டல்ல. மகிழ்ச்சியான ஒரு வாரம். தங்க குட்டி ஆசனாக, சகோதரனாக, எப்போதும் ஒரு நல்ல தோழனாக உன்னை பிரியாமல் கரை சேர்ப்பேன் தங்கமே. அப்பா என்று நீ அழைப்பதற்காகவே என் அடுத்த காத்திருப்பு என்று தன்னுடைய மகளைப் பற்றி பாசத்தை உருகி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களையும், குழந்தைக்கு ஆசீர்வாதங்களையும் கூறி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications