கையில் பேண்டேஜ் உடன் கமல்...இனி சிங்கத்தின் கர்ஜனை காணொளியில் நெகிழ்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் வரலாற்றிலே.... பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மட்டுமின்றி... கமலஹாசன் ரசிகர்களாலும்... மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரமோ இன்று வெளியான ப்ரமோவாகத்தான் இருக்க முடியும்.
அந்த அளவிற்கு நிகழ்ச்சி இனி எப்படி...? யாரால்..? நடத்தப்படும் கமல் வருவாரா..? என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
எதிர்பார்த்திருந்த ரசிகர்களை ஏமாற்றாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ரசிகர்கள் முன் தோன்றி உற்சாகம் ஊட்டியுள்ளார்.

தொகுப்பாளராக அறிமுகமான கமல்
வெளிநாடுகளில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வெற்றிகரமாக நடந்துவந்த 'பிக் பிரதர்' நிகழ்ச்சியின் தமிழ் உரிமையை பெற்று, விஜய் டிவி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியாக இங்கு துவங்க முடிவெடுத்தபோது.. அவர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஷயத்தில் கமலை தேர்வு செய்தது நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாகும். வாரம் முழுவதும் பல்வேறு சர்ச்சைகள், சண்டைகள் போட்டியாளர்களுக்கிடையே நடந்தாலும், அதை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியில் புயலைக் கிளப்பினாளும், அந்த வார இறுதியில் கமலஹாசன் அந்த சச்சரவுகளையும், பிரச்சனைகளையும் மறக்கும் அளவிற்கு அவற்றிற்குத் தீர்வும் கண்டு தவறு செய்பவர்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்து நிகழ்ச்சியின் சுவாரசியம் குறையாமல் இதை ஒரு கருத்தாக நிகழ்ச்சி போல உருவகப்படுத்தி விடுவார். அப்படி அவர் செய்வதாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எந்த தடையும் இது வரை வரவில்லை.

தைரியம் கொடுத்த பிக் பாஸ்
கலை ஞானி என்று சொல்லப்படும் அளவிற்கு அனைத்து விஷயங்களிலும் கமலஹாசன் நுண்ணறிவை பெற்றிருந்தாலும், அவருடைய அறிவையும் பேச்சையும் எளிய மக்கள் வரை கொண்டு செல்லும் ஒரு ஆயுதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை எளிதாக பயன்படுத்திக்கொண்டார். சொந்தமாக அரசியல் கட்சியைத் தொடங்கும் அளவிற்கு இவருக்கு தைரியம் கொடுக்கும் அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை பட்டி தொட்டி எங்கும் வீட்டில் ஒருவரைப் போல கொண்டு சேர்த்தது. அதனால் தான் அரசியல் கட்சி,பட சூட்டிங் என பல்வேறு வேலைகளில் பிஸியாக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை கமல் விரும்பி செய்து வருகிறார்.

பொறாமை பாதிப்பு
கொரனா பரவல் தீவிரமாக இருந்த காலம்,தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் போன்ற நேரத்தில் பிஸியாக பயணம் மேற்கொண்டிருந்த பொழுது கூட கமலுக்கு ஏற்படாத பெருந்தொற்று தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சி பாதி நாட்களை கடந்த நிலையில் ஏற்பட்டது பிக்பாஸ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அவரது கட்சியினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு பிரபலங்களும் கமல் அவர்கள் விரைவில் குணமாகி வர சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்த வேளையில் கூட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கமல் எதுவும் பதில் கருத்து பதிவு விடாதது ரசிகர்களுக்கும் அவரது கட்சியினருக்கும் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்துவந்தது.

நெகிழ்ச்சியில் ரசிகர்கள்
ஆனால் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்ட ப்ரமோ வில் கமல் தோன்றியதை பார்த்தவுடன் அவரது ரசிகர்கள் ஆனந்தம் அடைந்துள்ளனர். கையில் பேன்டேஜுடன் தோன்றியதை பார்த்து வருத்தப்பட்டாலும், ஆண்டவரை பார்த்த உற்சாகத்தில் அவரது ரசிகர்கள் விஜய் டிவி நிறுவனத்திற்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களின் முயற்சியால் மட்டுமே தங்கள் தலைவரை பார்த்ததாகவும்...இனி சிங்கத்தின் கர்ஜனை காணொளியில் காண்போம்... என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications