பிரியங்காவை சிலர் தவறாக நினைக்கிறார்கள்...பாசத்தால் பொங்கும் மதுமிதா
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்துக்கொண்டிருக்கும் மதுமிதா தற்போது பேசிய கருத்து ரசிகர்களை மிரள செய்திருக்கிறது.
ஏற்கனவே தொகுப்பாளராக பலருக்கும் பரிச்சயமான பிரியங்காவை பற்றி தற்போது மது கூறிய கருத்து பலரையும் சிலிர்க்க வைத்திருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே பிரியங்காவிற்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்துக்கொண்டிருக்கும் மதுவுக்கு ரசிகர்கள் தற்போது சப்போர்ட் தொடங்கிவிட்டார்கள்.

தனித்தன்மையான குணம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கவர்ந்த பிரியங்காவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இவருடைய குறும்புகளை பார்க்க வேண்டும் என்பதற்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். எவ்வளவுதான் போட்டியாளர்கள் சிலர் அழுது வெறுப்பேற்றி கொண்டிருந்தாலும் இவருடைய காமெடி அனைத்தையும் மாற்றி விடுகிறது.

நெட்டிசன்களின் குற்றச்சாட்டு
ஏற்கனவே விஜய் டிவியில் செல்லப் பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்த பிரியங்கா, பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகும் இந்த நிகழ்ச்சியில் தான் ஒரு போட்டியாளர் என்பதையும் மறந்து தான் இந்த வீட்டின் ஒரு செல்லப் பிள்ளை என்றும் தனக்கு இங்கே ராஜமரியாதை வழங்க வேண்டும் என்று இவர் நடந்து கொள்கிறார் என ஒரு சிலர் குற்றம் சாட்டி வந்தனர்.

மதுமிதாவின் கருத்து
நெட்டிசன்களை பற்றி எப்போதுமே கவலைப்படாத இவர் தற்போது இவருக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்களை பற்றி கண்டு கொள்வதே இல்லை. எந்த இடத்திலும் நான் நானாக தான் இருக்கிறேன் என்று இவருடைய சேட்டைகளால் அந்த இடத்தைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார். அதனாலேயே இவருடன் பழகுபவர்களிடம் மனதில் நல்ல இடத்தையும் பெற்று விடுகிறார். அதுபோலத்தான் தற்போது இந்த வீட்டில் ஒரு போட்டியாளராக இவருடன் இருக்கும் மதுமிதாவின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார்.

கொண்டாடும் ரசிகர்கள்
தீபாவளி வாரம் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தீபாவளி கொண்டாட தொடங்கிவிட்டார்கள். அதில் புதிதாக, போட்டியாளர்கள் இந்த வீட்டில் யார் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்கள் போட்டோ ஒட்டியிருக்கும் ராக்கெட் வெடியை வெடிக்க சொல்லி புது டாஸ்க் வைத்திருக்கின்றனர். அதில் நான் பிரியங்காவை தான் இந்த வீட்டில் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரைப்பற்றி சிலர் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என அவருக்கு சப்போர்ட் கொடுத்த மதுவை பார்த்ததும் பிரியங்காவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications