மெகா ஹிட் படத்திற்கு இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!! இனிமேல் இப்படி நடக்க சான்சே இல்ல
சென்னை:தமிழ் சினிமாவின் எவர்கிரீன் திரைப்படங்களுள் ஒன்றான மெல்லத் திறந்தது கதவு குறித்து ஒரு தகவல் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
படத்தின் பெயர் மெல்லத் திறந்தது கதவா? கதவு திறந்தது மெல்லவா? என்று சென்சார் அதிகாரிகளே கலாய்க்கும் அளவிற்கு சுவாரசியமான நிகழ்வு நடந்துள்ளது.
அந்த சுவாரசியமான நிகழ்ச்சியை படித்த இணையதள வாசிகள் அந்த காலத்தில் இப்படி எல்லாம் நடந்திருக்கிறதா!!?? என்று ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

எவர்கிரீன் மூவி
1986 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மெல்லத் திறந்தது கதவு. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரித்த இந்த படத்தை எழுதி இயக்கியிருந்தார் ஆர். சுந்தர்ராஜன். அந்த நேரத்தில் இசை ஜாம்பவான்களாக இருந்த இளையராஜாவும்-எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். மோகன், ராதா,அமலா என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தை சிறப்பாக இயக்கி இருந்தார் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.அதுமட்டுமின்றி இப்படத்தில் இடம்பெற்று இருந்த குழலூதும் கண்ணனுக்கு, ஊருசனம் தூங்கிருச்சு, தில் தில் மனதில்,தேடும் கண் பார்வை, வா வெண்ணிலா, போன்ற பாடல்கள் இன்றளவும் கேட்க கேட்க திகட்டாத பாடல்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

மதுரை டிஸ்ட்ரிபியூட்டர் பண்ண வேலை
மெல்லத் திறந்தது கதவு படம் ரிலீஸ் ஆயிருந்த சமயத்தில் மதுரையை சேர்ந்த டிஸ்ட்ரிபியூட்டர் ஒருவர் ஒரு வித்தியாசத்திற்காக படத்தின் இரண்டாவது பாதி ரீல் பெட்டியை முதலாவதாகவும்,முதலாவது பாதி ரீல் பெட்டியை இரண்டாவதாகவும் வைத்து படத்தை ஒட்டியுள்ளார். பெட்டியை மாற்றி படம் ஒட்டுவதை குறித்து அறிந்திராத ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு படம் அருமையாக இருப்பதாக கூறியுள்ளனர்.இந்த தகவல் காட்டு தீ போல் பறக்க தமிழக முழுவதும் உள்ள டிஸ்ட்ரிபியூட்டர்களும் இதே போன்று பெட்டியை மாற்றி படத்தை ஒட்டியுள்ளனர். அனைத்து இடங்களிலும் படம் நன்றாக இருப்பதாகவே ரிசல்ட் வந்துள்ளது.

மறுத்தணிக்கை
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு யோசித்த படக்குழு பேசாமல் படத்தை அப்படியே மாற்றிவிட முடிவெடுத்து படத்தை மறுத்தணிக்கை செய்வதற்கு தணிக்கை குழுவிற்கு அனுப்பியது.இதுவரை இப்படி ஒரு நிகழ்ச்சியை கண்டிராத தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் படக்குழுவினரை பார்த்து என்னப்பா.. படம் பேரு இப்ப மெல்ல திறந்தது கதவா??இல்ல கதவு திறந்ததும் மெல்லவா?? என்று கலாய்த்துள்ளார்.

எடிட்டர் ஆக மாறிய டிஸ்ட்ரிபியூட்டர்கள்
பட வெளியீடு தேதி,நேரம் போன்றவற்றை முடிவு செய்து வந்து டிஸ்ட்ரிபியூட்டர்கள், முதன் முறையாக பட கதையை மாற்றம் செய்த நிகழ்வு மெல்ல திறந்தது கதவு படத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இதைப் போன்று ஒரு எடிட்டிங் வேறு எந்த படத்திற்கும் நடந்ததில்லை இனி நடக்கப் போவதுமில்லை என்ற பெருமை மெல்லத் திறந்தது கதவு படத்திற்கு மட்டுமே சேரும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications