நயன்தாரா உயரம்... கீர்த்தி சுரேஷுடன் ஜோடியாக நடிக்க விருப்பம் ... நாஞ்சில் சம்பத் அதிரடி!
சென்னை: சன் டிவியின் ஞாயிறு நிகழ்ச்சிகளில் ஒண்ணு லொள்ளுபா. இது ஒரு காமெடி சரவெடின்னு சொல்லலாம், சிரிக்க வைக்கறாங்க. ஜெயச்சந்திரன், தாரிகா தொகுத்து வழங்க, மதுரை முத்து, ஆதவன் அவ்வப்போது இடைச்செருகலாக காமெடி செய்கிறார்கள்.
மதுரை முத்து நல்ல ஸ்டேண்ட் அப் காமெடியன், மதுரை பாஷை வெள்ளந்தியான பேச்சுன்னு இருந்தாலும், அவ்வப்போது ரெட்டை அர்த்த காமெடியும் சொல்லுவார். கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கும்னு சொன்னாலும், காமெடியில் வல்லவர் என்பது உண்மை.
கடந்த வார நிகழ்ச்சியில் ஓவியா சிறப்பு விருந்தினராக வந்திருந்தபோது, ரெட்டை அர்த்த காமெடி சொன்னார் முத்து. அப்போ ஓவியா சொன்னார் இந்த ஜோக் எல்லாருக்கும் புரியும், ஆனா புரியாத மாதிரி நடிப்பாங்க.

முத்து முதுகில் ஓவியா
இதே போல ஜோக்ஸ்தான் 90 எம்எல் படத்திலும் இருக்கும்னு ஓ.. இது போல காமெடிதான் இருக்குமான்னு முத்து கேட்க, கவலைப்படாதீங்க இதுக்கு மேல இருக்கும்னு மதுரை முத்து முதுகை தட்டிக் குடுத்தார் ஓவியா

அழகு நிலவு
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நம்ம நாஞ்சில் சம்பத் வந்திருந்தார். முன்பு தனக்குப் பிடித்த நடிகை கே.ஆர்.விஜயா என்று சொன்னார். சில வாரங்களுக்கு முன்னர் விமான நிலையத்தில் பார்த்தேன் அதே பொலிவோடு இருந்தார். அவர் ஒரு நிலவு மாதிரி எப்போதும் அழகாக ஜொலித்துக்கொண்டே இருக்கிறார் என்றார்.

யாருடன் நடிக்க
இப்போது பிடித்த நடிகை யார் என்று கேட்டதற்கு நயன்தாரா என்றும், நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரிக்கு உயிர் கொடுத்தவர்னும் சொன்னார். இப்போது நடிகராகிவிட்டீர்கள், யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை என்றபோது, கீர்த்தி சுரேஷுடன் நடிக்க விருப்பம்., நயன்தாரா எனக்கு பிடித்தவர் என்றாலும், அவர் என்னைவிட உயரம் அதிகம் என்று கூறி சிரிப்பில் அரங்கத்தை அதிர வைத்தார்.

கவர்ச்சி ஸ்மிதா
சில்க் ஸ்மிதாவைப் பற்றி பேசியபோது உதடுகளுக்கும் கவர்ச்சி உண்டு என்பதை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்தவர் என்று கூறினார். நிகழ்ச்சி நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டதனாலேயே சிறப்பாக இருந்தது என்று சொல்லலாம்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications