இந்து மக்கள் கட்சிக்கு செம குஷி.. கும்பகோணம் மக்களும் ஹேப்பி.. எதுக்குன்னு பாருங்க!
பொன். மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
கும்பகோணம்: பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
இன்று தமிழகத்தின் ஹாட் நியூஸ் பொன். மாணிக்கவேல்தான். இன்று அவர் ஓய்வு பெற போகிறார் என்பதால் நேற்றே இந்த இது சம்பந்தமாக சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
ஒரு பக்கம் அவருக்கு பிரவு உபச்சார விழா நடத்தினார்கள். இன்னொரு பக்கம் பதவி முடிகிறதே, இவரே தொடர்ந்து பதவியில் இருக்க கூடாது என்று ஏக்கமும் எழ ஆரம்பித்தது. கடைசியில் மீண்டும் அவரது பணியை நீட்டித்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு விட்டது.

ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்
இதை எல்லா தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டாலும் 2 மாவட்டத்தில் மட்டும் பொன். மாணிக்கவேல் சம்பந்தமாக ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் எடுத்திருக்கிறார்கள். ஒன்று குமரி மாவட்டம், மற்றொன்று தஞ்சை மாவட்டம். பணி நீட்டிப்பு உத்தரவு வருவதற்கு முன்பு நடந்த சம்பவம் இது.

சிறப்பு பூஜை
இன்றோடு பணி ஓய்வு பெறப் போகிறார் என்பதால் அவர் ஆற்றிய பணியை பாராட்டும் விதமாக திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் பெருமாள் கோவிலில் பொன் மாணிக்கவேல் பெயருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதனை செய்தது அப்பகுதி மக்கள்தான். எல்லோருமே இந்த பூஜையில் கலந்து கொண்டு பொன்.மாணிக்கவேலுக்கு தங்களது வாழ்த்துகளை உரித்தாக்கினர்.

பட்டாசு வெடிப்பு
அதேபோல, பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை வரவேற்று கும்பகோணத்தில், மக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். ஏனெனில், 50 வருஷத்துக்கு முன்னாடி காணாமல் போன ராஜராஜ சோழன், உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகளை குஜராத்திலிருந்து மீட்டு கொண்டு வந்ததற்கு தஞ்சாவூர் மக்களே விழாவாக அதை கொண்டாடினார்கள். தற்போதும் பணி நீட்டிப்பை வரவேற்று கும்பகோணம் மக்கள் ஆரவாரம் செய்தனர்.

முதல் டார்கட்
குறிப்பாக இந்து மக்கள் கட்சியினர் தலைமை தபால் அலுவலகம் அருகே திரண்டு பட்டாசுகளை வெடித்தார்கள். வாகனங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உட்பட ரோட்டில் ஒரு கடை பாக்கி இல்லாமல் இனிப்புகளை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதுவும் இல்லாமல் முதல் டார்கட்டே கும்பகோணம் என்று பொன்.மாணிக்கவேல் சொல்லி இருக்கிறார். இதனால் கூடுதல் சந்தோஷத்தில் கும்பகோணம் மக்கள் இருக்கிறார்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications