வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளால் பாஜகவினர் திட்டினர்.. சோபியா தந்தை குமுறல்
என் மகளை அசிங்கமாக தமிழிசை திட்டினார் என்று சோபியா தந்தை புகார் அளித்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: தமிழக பாஜக தலைவர் தமிழிசை உட்பட 10 பேர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதனால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கைதாகியுள்ள சோபியாவின் தந்தை புகார் அளித்துள்ளார்.
சென்னையில் இருந்து தூத்துகுடி சென்ற விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டு, சோபியா என்ற பெண் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டார்.

3 பிரிவுகளில் வழக்கு
இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை செளந்திரராஜன் விமானத்திலேயே அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சோபியா மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொலை மிரட்டல்
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சோபியாவை 15 நாள் காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் தன்னையும் தன் குடும்பத்தினரையும் தமிழிசை செளந்திராஜன் உட்பட 10 பேர் கொலை மிரட்டல் விடுத்தனர் என்று சோபியாவின் தந்தை சாமி என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

தகாத வார்த்தைகள்
செய்தியாளர்கள் முன்னிலையிலேயே இந்த பகீர் தகவலை அவர் கூறியுள்ளார். மேலும் தன் மகளை தகாத வார்த்தைகளால் பாஜகவினர் பேசியதாவும், அவை என்னவென்று வெளிப்படையாக என்னால் சொல்ல முடியவில்லை என்றும் தெரிவித்தார். பின்னர், சோபியாவின் தந்தை தமிழிசை உள்ளிட்டவர்கள் தமக்கும், தன் குடும்பத்தினருக்கும் விடுத்த கொலைமிரட்டல் குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.

கொலை மிரட்டல்
அந்த புகாரில், "என் மகளை அசிங்கமாக பேசி, கொலைமிரட்டல் விடுத்தும், எங்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்திய தமிழிசை உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications