தமிழக விவசாயிகள் வைத்திருக்கும் மண்டை ஓடுகள் யாருடையது தெரியுமா?.. அதிர்ச்சி கதைகள்!
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் கையில் வைத்திருக்கும் மண்டை ஓடுகள் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
டெல்லி: டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் கையில் வைத்திருக்கும் மண்டை ஓடுகள் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இந்த மண்டை ஓடுகளுக்கு பின் பல சோக கதைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் 29 மாநில விவசாயிகள் போராடி வருகிறார்கள். 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
இவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று கொண்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

மண்டை ஓடுகள்
இதில் தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராடி வருகிறார்கள். மண்டை ஓடுகளை பலர் கையில் வைத்து போராடி வருகின்றனர். சிலர் கழுத்தில் மண்டை ஓடு மற்றும் எலும்புகளை வைத்து மாலை அணிந்து போராடி வருகின்றனர்.

என்ன கதைகள்
இந்த எலும்புக்கூடுகளை இவர்கள் வெறுமனே சுடுகாடு சென்று எடுத்து வரவில்லை. இது வறுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மண்டை ஓடுகள் ஆகும். போராடும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட தங்கள் சக விவசாயிகளின் மண்டை ஓடுகளைத்தான் இப்படி வைத்து இருக்கிறார்கள். ஆம் விவசாயம் பொய்த்துப் போய் இழப்புகளை சந்தித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மண்டை ஓடுகள்தான் அது.

கண்ணீர்
இவர்களில் பலர் டெல்டா மாவட்ட விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வைத்திருக்கும் போது சில விவசாயிகள் கண்ணீர் விட்டபடி இருந்தனர். இந்த எலும்புக்கூடுகள் கதையை கேட்ட வெளிமாநில விவசாயிகளும் அதிர்ச்சிக்கு உள்ளாகினார்கள்.

சிலர் பெண்கள்
இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகளை போலவே ராஜஸ்தான், மத்திய பிரதேச விவசாயிகளும் ''இறந்தவர்கள்'' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். தங்கள் வீட்டில் இறந்து போன விவசாயிகளின் புகைப்படங்களை அவர்கள் எடுத்து வந்தனர். புகைப்படங்களை வைத்து அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications