Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி ஷாகீன் பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கும் ஆம் ஆத்மிக்கும் தொடர்பு- போலீஸ் திடுக்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்லி ஷாகின் பாக்கில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்தியோர் மீது துப்பாக்கிச் சூடு - வீடியோ

    டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெறும் டெல்லி ஷாகீன் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குஜ்ஜார் என்ற இளைஞருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக்க டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆம் ஆத்மி கட்சியினர் இதனை மறுத்துள்ளனர்.

    இது தொடர்பாக டெல்லி போலீஸ் அதிகாரி ராஜேஷ் டியோ கூறுகையில், ஷாகீன் பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குஜ்ஜாரும் அவரது தந்தை சவுத்ரி கஜே சிங்கும் ஓராண்டுக்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். சவுத்ரி கஜே சிங், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவர். டெல்லி சட்டசபை மற்றும் மாநகராட்சி தேர்ர்தல்களில் 2008 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட்டவர் என்றார்..

    Shaheen Bagh Shooter Kapil Gujjar links with AAP, says Delhi Police

    மேலும் ஆம் ஆத்மி கட்சி நிகழ்ச்சியில் கபில் குஜ்ஜார் பங்கேற்ற புகைப்ப்டங்களையும் ராஜேஷ் டியோ வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் இருக்கும் ஆம் ஆத்மி எம்.எல்ல்.ஏ. சஞ்சய் சிங், நாட்டின் உள்துறை அமைச்சராக்க அமித்ஷா இருக்கிறார். டெல்லி சட்டசபை தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன்னதாக இதுபோன்ற அநாகரிகமான அரசியலை பாஜக செய்கிறது என்றார்.

    அதேபோல் கபில் குஜ்ஜாரின் தந்தை சவுத்ரி கஜே சிங் கூறுகையில், 2 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியலைவிட்டு விலகிவிட்டேன். எனக்கு எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு கிடையாட்து. நாங்கள் எங்களது பால் பண்ணை தொழிலை பார்த்து கொண்டிருக்கிறோம் என விளக்கம் அளித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+