மின்னும் விளக்கில் ஜொலிக்கும் போட்டியாளர்கள்...கொண்டாட்டத்தை தொடங்கிய பிக் பாஸ்
சென்னை: இதுவரைக்கும் பிரச்சனைகளோடு மல்லுக்கட்டிய போட்டியாளர்கள் இன்று ஆட்டம் பாட்டத்தில் கொண்டாடி வருகின்றனர்.
இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
வித விதமான கெட்டப்பில் இவர்கள் ஆடும் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.

தொடரும் பண்டிகை கொண்டாட்டம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பண்டிகைக்கால நெருங்கிவிட்டதால் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டது. ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் தங்களுடைய பண்டிகை காலங்களில் கொண்டாடி மகிழ்ந்து இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் அவர்களுடைய சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் பார்த்து ரசிகர்களும் என்ஜாய் பண்ணி விட்டனர். அதுபோலதான் தற்போதைய சீசனிலும் தீபாவளி பண்டிகைக்கு முன்னேற்பாடாக இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது.

சூடு பிடித்த ஆட்டம்
இந்த வாரம் நிலத்தின் ஆளுமையை பிக்பாஸ் கொடுத்திருப்பதால் நிலத்தில் காயின் நிரூப் கைவசம் இருப்பதால் அவர் போட்டியாளர்களிடம் கடுமையாக தன்னுடைய ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். இதை முதலில் பார்த்த ரசிகர்கள் என்ன நிகழ்ச்சி வேற மாதிரி தொடங்கி விட்டதா?? என கூறி வந்த நிலையில் ஆட்டம் சூடு பிடித்து விட்டது என்று கூறிவந்தனர். இரண்டாவது ப்ரமோவில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஆட்டம் போட்டு இருக்கிறனர். இதை பார்த்ததும் அப்போ இன்று சண்டை சச்சரவுக்கு இருக்காதா என்று சிலர் கேட்டு வருகின்றனர்.

அசத்தும் தாமரையின் ஆட்டம்
போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கெட்டப்பில் களம் இறங்கி இருக்கின்றனர். அதில் தாமரைச் செல்வியின் ஆட்டம் வேற லெவல் இருந்துவருகிறது. இவருடைய ஆட்டத்தை இதுவரைக்கும் பார்க்காத ரசிகர்கள் தற்போது 'முந்தி...முந்தி...விநாயகரே' பாட்டுக்கு தாமரைச்செல்வி ஆடிய ஆட்டத்தை பார்ப்பதற்காகவே சிலர் இந்த நிகழ்ச்சியை பார்த்து விட வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இசைவாணி சந்திரமுகி கெட்டப்பில் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

ரஜினி கெட்டப்பில் சிபி
சிபி ஒருபக்கம் ரஜினியை நினைவுபடுத்திக் கொண்டு இருக்கிறார் என்று ஏற்கனவே அபிஷேக் கலாய்த்துக் கொண்டிருந்தது போல, தற்போது 'எம் பேரு படையப்பா..'என்னும் பாட்டுக்கு செம பர்பாமன்ஸ் காட்டியிருக்கிறார். இவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து போட்டியாளர்களும் விதவிதமான உடை அலங்காரத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதில் யாரை பார்ப்பது யாரை விடுவது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். அதுவும் பிரியங்காவின் வேற லெவல் கெட்டப் பார்த்து, காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்றும் அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications