பிக்பாஸ் அல்டிமேட்: ஓவியாவின் வருகை..ரசிகர்கள் வெளியிட்ட புது ஆதாரம்.. கடைசியில் இப்படி ஆகிவிட்டதே
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியாவின் வருகையை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் அதிர்ச்சி கிடைத்து இருக்கிறது.
ஓவியாவின் தற்போதைய நிலை என்ன என்று ரசிகர்கள் ஆதாரத்தோடு போட்டோக்களை வெளியிட்டு இருக்கின்றனர்.

பிக் பாஸின் புதுமுயற்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று இருந்தாலும் இதில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் இது அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் நிகழ்வுகளை முழுமையாக காட்டப்படும் விதமாக இருக்கும் என்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

மீண்டும் வலம் வரும் போட்டியாளர்கள்
தற்போது வரைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களை முடிவடைந்துள்ளது. இதில் ஒவ்வொரு சீசனிலும் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதை அதிகமாக கவர்ந்த போட்டியாளர்கள் மட்டுமே இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் போட்டியாளர்கள் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது முதல் சீசனில் அதிக அளவில் ரசிகர்களை தன் வசப்படுத்திய ஓவியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று ஆரம்பத்திலிருந்தே செய்திகள் வெளியாகி வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
ஓவியாவால் ஏற்கனவே முதல் சீசன் வேற லெவல் வரவேற்பு பெற்றிருந்தது. அதுபோல தற்போதைய அல்டிமேட் நிகழ்ச்சியும் வரவேற்பை பெறும் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இவருக்காக பலர் ஃபேன்ஸ் பேஜ்களை தொடங்கி வருகின்றனர். ஓவியாவிற்காக ஆர்மிகளையும் வழக்கம்போல தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் ஓவியாவின் அறிமுக ப்ரமோ இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் ஓவியா கலந்து கொள்வாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஓவியா வைல்ட் கார்ட் வழியாகத்தான் உள்ளே நுழைகிறார் என்ற செய்திகளும் பரவி வருகிறது.

இது என்ன புது கதை
தற்போது ஓவியாவின் தீவிரமான ரசிகர்கள் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இல்லை என்று கூறிவருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஓவியா திரைப் படங்களில் நடிப்பதற்காக போட்டோஷூட்டில் பிஸியாக இருக்கிறார் என்று ஒரு சில போட்டோஷூட் போட்டோக்களை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதனால் அவருடைய வருகையை உறுதி என்று பலர் கூறி வருகிறார்கள் அது எல்லாம் பொய் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் இன்னும் ஒரு சில ரசிகர்கள் இதுதான் பொய், ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்று அதற்கான ஒருசில போட்டோக்களையும் வெளியிடுகின்றனர். ஓவியா உள்ளே வருவதற்கு முன்பே ரசிகர்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்தி விடுமோ என்று பல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications