Pandian Stores 2 Promo: சரவணனுடன் சேர்ந்து வாழணும்! தர்ணா செய்த தங்கமயில்! இடியென வந்து இறங்கிய செய்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 டிசம்பர் 15 ஆம் முதல் தேதி முதல் 20ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சரவணனுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று தங்கமயில் பாண்டியன் வீட்டிற்கு வந்து தர்ணா செய்கிறார். ஆனால் கடைசியில் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த கதைக்களம் தான் இப்போது வந்திருக்கிறது. பாண்டியன் குடும்பத்தினரிடம் தங்கமயில் குடும்பத்தினர் ஆரம்பத்தில் இருந்து பொய் மேல் பொய் சொல்லிக் கொண்டிருந்தனர். இதனால் எப்போதாவது தங்கமயில் பற்றிய உண்மைகள் குடும்பத்திற்கு தெரியவரும் என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரவணனுக்கு தங்கமயில் பற்றிய ஒவ்வொரு ரகசியமும் தெரிய வந்தது. தங்கமயில் படிக்கவில்லை என்ற உண்மை தெரிந்ததும் சரவணன் அவரிடம் பேசுவது விட்டு விட்டார். அதற்கு தங்கமயில் பிறகு கர்ப்பமாக இருக்கிறார் என்றதும் சரவணன் மனம் மாறி இருந்தார். கடைசியில் அந்த குழந்தையும் இல்லை என்று ஆகிவிட்டது. இதனால் கடும் கோபத்தில் இருந்த சரவணனுக்கு தங்கமயில் தன்னைவிட இரண்டு வயது மூத்தவள் என்ற உண்மையையும் தெரிந்ததும் விரக்தியின் உச்சத்திற்கு போய்விட்டார்.
Pandian Stores 2: மயிலின் பாதி உண்மை தெரிந்தே கோமதி எடுத்த முடிவு! ராஜி கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்
இதுவரைக்கும் அமைதியாக இருந்த சரவணன் ஒரு கட்டத்தில் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டார். தங்கமயில் மீது தன் கோபத்தை காட்டிக் கொண்டு இருக்க அதை பார்த்து பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் தங்கமயிலுக்கு அனுதாபம்பட்டனர். சரவணனை திட்டிக் கொண்டிருந்தனர். இதனால் சரவணன் தன் மீது தப்பு இல்லை என்பதை குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டார்.
தங்கமயில் பற்றிய மொத்த உண்மைகளையும் அவர் சொல்லி இருக்கிறார். இதனால் பாண்டியன் குடும்பத்தினர் மயில் குடும்பத்தை வர வைத்து மயிலை வெளியே அனுப்பி இருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது .அதில் தங்கமயில் பாண்டியன் வீட்டிற்கு வந்து நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் நான் சரவணன் மாமா கூட சேர்ந்து வாழணும் என்று அழுது கொண்டிருக்கிறார். நான் இந்த வீட்டில் தான் இருப்பேன் என்று அவர் தர்ணாவை செய்கிறார்.
அப்போது அங்கு வந்த மயில் குடும்பத்தினர் என்னுடைய மகளை வீட்டை விட்டு விரட்டிடீங்களே நீங்க நல்லா இருப்பீங்களா? என்று சாபம் விடுகின்றனர். இவர்கள் இப்படி சொன்னதும் கோபத்தோடு வெளியே வந்த சரவணன் இப்போது நீ எங்கிருந்து போகவில்லை என்றால் என்னுடைய சாவுக்கு நீயும், உன்னுடைய அப்பா, அம்மா தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று சரவணன் சொன்னதை கேட்டு பாண்டியன் அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு என்னடா இப்படி பேசிட்டு இருக்க என்று கேட்க, இவள் எனக்கு வேண்டாம் இவளிடமிருந்து எனக்கு விவாகரத்து வாங்கி கொடுத்து விடுங்கள் என்று சொல்கிறார். அதைக் கேட்டு மயில் அதிர்ச்சி அடைகிறார். சரவணன் கேட்ட மாதிரி அவருக்கு விவாகரத்து கிடைக்குமா? அல்லது மயில் எப்படி பாண்டியன் குடும்பத்திற்கு மீண்டும் வரப்போகிறார்? என்று எதிர்பார்ப்போடு அடுத்த வாரம் போகப்போகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை இதுபோல எப்போது குடும்பத்திற்கு தெரியும் என்ற எதிர்பார்ப்போடு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோவிற்கு ரசிகர்கள் கமெண்ட் கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனால் நீங்கள் நினைப்பது இப்போதைக்கு நடக்கவே செய்யாது பாஸ். எப்படியும் இன்னும் ஒரு வருஷத்துக்கு இந்த உண்மையை வைத்து இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள். சரி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலாவது உண்மையை சீக்கிரமா உடைச்சிட்டாங்க என்று ஆறுதல் பட்டுக்கோங்க.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications