பாண்டியன் ஸ்டோர்ஸ்: அப்பத்தாவுக்கு நடந்த கொடுமை! எந்த அம்மாவுக்கும் நடக்கக்கூடாது! கோமதியின் அதிரடி முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (Pandian Stores 2 serial today episode) சீரியலில் 2026 பிப்ரவரி 28ஆம் தேதிக்கான எபிசோடில், குமாரவேலு வின் நிச்சயதார்த்தம் நிற்பதற்கு காரணம் அப்பத்தா தான் என்ற உண்மை சக்திவேலுக்கு தெரிந்து, யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்து இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், (Pandian Stores 2 serial Feb 28 Episode)காந்திமதி, தன்னுடைய பேரனுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லை என்பதையும், அவனுக்கு ஏற்கனவே அரசியுடன் திருமணம் ஆனது என்பதையும் தெரிந்துகொண்டதும், நேராக பெண் வீட்டாரை கோவிலுக்கு வரச்சொல்லி எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறார். இதைக் கேட்ட பெண் வீட்டார் உடனே நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டனர்..
குமாரவேல் அரசி கல்யாணம் பற்றிய விஷயம் எப்படி அவங்களுக்கு தெரிஞ்சது என்று சந்தேகப்பட்ட சக்திவேல், பெண் வீட்டாரை அழைத்து யார் சொன்னது என்று கேட்க, அவர்கள் நேராக "காந்திமதி தான் சொன்னார்" என்று சொல்லிவிடுகிறார்கள். இதைக் கேட்டதும் கடும் கோபத்துடன் வீட்டுக்கு வந்த சக்திவேல், அம்மாவை அழைத்து நிற்கவைத்து செம்ம திட்டு திட்டு பேசுகிறார். இதற்குப் பிறகு "இனிமே இந்த வீட்டில் உனக்கு இடமே கிடையாது... இப்பவே வெளியே போ" என்று நேராகக் கூறுகிறார்.
அம்மாவை வீட்டை விட்டு துரத்திய மகன்
அப்போது அங்கிருந்த பழனி உடனே எதிர்த்து, "அம்மாவை எப்படி வீட்டை விட்டு வெளியே போக சொல்ல முடியும்... இந்த வீட்டில் அவங்களுக்கும் உரிமை இருக்கு" என்று சப்போர்ட் செய்கிறார். ஆனால் அதற்கு சக்திவேல், "இது என் அப்பாவின் சொத்து... இதில் அம்மாவுக்கு பங்கு கிடையாது... நம்ம மூணு பேருக்குத்தான் உரிமை" என்று சொல்லி, காந்திமதியின் கையைப் பிடித்து தரதரவென வெளியே இழுத்து வந்து வீட்டு வாசலில் தள்ளிவிடுகிறார்.
அந்த சத்தம் கேட்டு வெளியே வந்த கோமதி மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியாக நிற்கிறார்கள். "என்ன இது... அம்மாவை ஏன் இப்படிப் பண்றீங்க?" என்று கோமதி கேட்கிறார். அதே நேரத்தில் அங்கு வந்த பாண்டியனுக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் குழப்பமாகிறது.
கோமதி எடுத்த முடிவு
பிறகு சக்திவேல் நடந்ததெல்லாம் சொல்ல, குமாரின் நிச்சயதார்த்தத்தை காந்திமதி தான் நிப்பாட்டினார்னு எல்லாருக்கும் தெரிந்து விடுகிறது. உடனே கோமதி, "அவங்களை வெளியே அனுப்பினா என்ன... நான் பார்த்துக்கறேன்... காலம் முழுக்க சமைத்து போடுறேன்" என்று சொல்லி தன்னுடைய அம்மாவை தனது வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்.
வருத்தத்தில் பாண்டியன்
ஆனால் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் காந்திமதியை வீட்டுக்குள் அழைத்துச் சென்றதை மனதில் வைத்து பாண்டியன் மிகவும் வருத்தப்படுகிறார். கடையில் இருக்கும் போது சரவணனிடம் "என்னிடம் ஒரு வார்த்தை கூட கேக்கலையே" என்று மனக்கசப்புடன் பேசுகிறார். அதற்கு சரவணன் உங்களுக்கு அப்பத்தா இங்க வந்தது விருப்பம் இல்லையா? என்று கேட்க, அப்படி எல்லாம் இல்ல அவங்க வந்தது சந்தோஷம் தான். ஆனா உங்க அம்மா என்கிட்ட ஒரு வார்த்தை பேசலையே என்பதுதான் எனக்கு வருத்தமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சமாளித்த காந்திமதி
இந்நேரம் கோமதியின் வீட்டில் காந்திமதியை சோஃபாவில் உட்கார வைத்து, பலகாரம் கொடுத்து கவனித்துக்கொண்டிருக்கும் கோமதி, "நீயே எதுக்கு குமாரின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தினே?" என்று நேராகக் கேட்கிறார். ஆனால் உண்மையில் அரசிக்காகத்தான் இதை செய்திருந்தாலும், அந்த காரணத்தை சொல்லாமல் காந்திமதி ஏதேதோ காரணம் சொல்லி சமாளிக்கிறார்.
இதனால் குடும்பத்துக்குள் இன்னும் பெரிய மோதல் வரப்போகிறதா... குமரவேல் - அரசி விஷயம் எப்படி வெளியில் வரும்... பாண்டியன் - கோமதி இடையிலான மனக்கசப்பு என்ன ஆகும்... என்ற எதிர்பார்ப்புடன் எபிசோடு முடிகிறது.
-
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications