Pandian Stores: கூப்பிட்டு சோறு போட்ட பாண்டியனுக்கு இது தேவைதான்! அண்ணன் வார்த்தையால் உடைந்த கோமதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 24ஆம் தேதிக்கான எபிசோடில் பாண்டியன் வீட்டிற்கு அவருடைய மனைவி கோமதியின் அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல் தன்னுடைய குடும்பத்தோடு சாப்பிட வந்திருக்கிறார். அங்கு சக்திவேல் பாண்டியன் மற்றும் அவருடைய குடும்பத்தையே அசிங்கப்படுத்தி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
கோமதியை பாண்டியன் திருட்டு கல்யாணம் செய்துவிட்டார் என்று பாண்டியன் மீது கோமதியின் அண்ணன்கள் கோபத்தில் இருந்தனர். ஆனால் இப்போது தன்னுடைய தங்கச்சிக்கு தங்க மயிலால் ஒரு பிரச்சனை என்றதும் அண்ணன்கள் இரண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருந்தனர். இருவரும் தனக்காக வந்ததற்காக கோமதி அவர்களுக்கு விருந்து வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். முதலில் மறுத்த அண்ணன் தன்னுடைய அம்மாவிற்காக சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் கோமதி வீட்டிற்கு சென்று இருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோமதி வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்காமல் சுகன்யா விடம் நீ என்ன இந்த வீட்டு பக்கமே வரல என்று கேட்க, அதற்கு சுகன்யா என் புருஷனை அசிங்கப்படுத்தி வெளியே போக சொன்ன பிறகு நான் எப்படி இங்கே வர முடியும் என்று சைக்கிள் கேப்பில் கோமதிக்கு ஒரு குத்து விடுகிறார்.
உடனே கோமதி ஏதோ தெரியாம கோவத்துல பேசிட்டேன் அதுக்காக இப்படி வராமல் இருந்திருவியா என்று சூழ்நிலையை சமாளிக்கிறார். பிறகு பெண்கள் எல்லோரும் கிச்சன் பக்கமாக போகின்றனர். அப்போது ராஜி தன்னுடைய அம்மாவிற்கும் சித்திக்கும் வீட்டை சுற்றி காண்பித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜியின் அம்மா நீ உண்மையில் சந்தோஷமா தான் இருக்கியா என்று கேட்கிறார்.
அதற்கு நான் இந்த வீட்ல ரொம்ப சந்தோஷமா இருக்கேமா என்று ராஜி சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் கிச்சனில் சமைத்து வைத்திருப்பதை பார்த்து காந்திமதி எதற்காக இவ்வளவு சமைச்சு வச்சிருக்க என்று கேட்க, கோமதி உனக்காக தாம்மா இவ்வளவு செஞ்சுருக்கேன், நீ நல்லா சாப்பிடுற சமயத்துல என்னால செஞ்சு போட முடியல அதனால இப்ப வாய்ப்பு கிடைத்ததும் செஞ்சு இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் ஹாலில் ஆண்கள் எல்லோரும் அமர்ந்திருக்கின்றனர். அப்போது சக்திவேல் இந்த வீட்டுக்குள் இருப்பதற்கு பிடிக்கல என்பது போல இருக்கிறார். அப்போது பழனி வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காமல் எல்லாரும் இப்படியே இருக்கீங்க.. ஏதாவது பேசுங்க என்று சொல்ல, முத்துவேல் கதிரிடம் வேலை எப்படி போகுது என்று கேட்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: உண்மை முகத்தை காட்டிய சக்திவேல்! கோமதிக்கு இது தேவையா? மீண்டும் மயிலால் பிரச்சனை
அதற்கு நல்லபடியா போகுதுன்னு கதிர் பதில் சொன்னதும், சக்திவேல் செந்திலிடம் உங்களுக்கு வேலை எப்படி போகுது என்று கேட்க, அதற்கு நான் இல்லாம எங்க ஆபீஸே நடக்காது என்று செந்தில் கொஞ்சம் பில்டப் கொடுத்து பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு வீடு ரொம்ப சின்னதா இருக்கு என்று சக்திவேல் கேட்க, எங்க வீட்ல இருக்கவங்களுக்கு இது போதும் என்று பாண்டியன் சொன்னதும், ஆமா ஒரு மருமகளை வீட்டை விட்டு துரத்திட்டீங்க, ஒரு மருமக வீட்டை விட்டு போயிட்டா இப்ப இருக்கிறது ஒரு மருமகளும் மகனும் தானே அதனால உங்களுக்கு இந்த வீடு போதும் என்று குத்தலாக பேசுகிறார்.
சிறக்கடிக்க ஆசை: மனோஜை கோர்ட்டில் சிக்க வைத்த ரோகிணி! விஜயாக்கு எதிராக திரும்பிய பிரச்சனை! இது தேவைதான்!
பிறகு வரும் வணிகர் சங்க தேர்தலில் யார் ஜெயிக்க போறாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இன்னொரு நபரின் பெயரை பாண்டியன் சொன்னதும் சக்திவேல் மற்றும் முத்துவேல் இரண்டு பேருடைய முகமும் மாறுகிறது. பிறகு எல்லோரும் குடும்பமாக ஒரு போட்டோ எடுத்து விட்டு சாப்பாடு பரிமாறுகின்றனர்.
வணிகர் சங்க தேர்தல்
அப்போது ராஜி இந்த வீட்டுக்கு எனக்காக வந்தீங்களா? அத்தைக்காக வந்தீங்களா? என்று கேட்க, அதற்கு ராஜியின் சித்தி உங்க ரெண்டு பேருக்காகவும் இல்ல அத்தைக்காக தான் உங்க அப்பாவும் சித்தப்பாவும் வந்தாங்க என்று காந்திமதி வீட்டில் போட்ட கண்டிஷன் பற்றி பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இன்றைய எபிசோடு முழுக்க அடுத்து என்ன பிரச்சனை வருமோ என்ற ஒரு பரபரப்போடு தான் இருந்தது. ஆனாலும் இனி நாளைக்கு இதை வைத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications