பாண்டியனை நாங்க மன்னிக்கல, மீண்டும் வில்லனான சக்திவேல்.. மீனா மீது சந்தேகப்பட்ட செந்தில், அடுத்த பஞ்சாயத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் 2026 ஜனவரி ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில் தன்னுடைய தங்கச்சி கோமதி குடும்பத்திற்காக இரண்டு நாட்களாக போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் என ஏறி இறங்கிய சக்திவேல் மற்றும் முத்துவேல் இன்று அதிர்ச்சி கொடுத்து இருக்கின்றனர். நாங்க இன்னும் பாண்டியனை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னதும், இவங்க திருந்திட்டாங்களோ என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. சரி இன்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் குடும்பத்தினர் எல்லோரும் ஜெயிலில் இருந்து வீட்டிற்கு வந்து இருக்கின்றனர். மறுபக்கத்தில் மயில் வீட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். இன்றைக்கு எல்லாம் முடிஞ்சிடும் நாளைக்கு பேச்சு வார்த்தை நடத்தி அந்த வீட்டுக்கு அனுப்பி வச்சிருவாங்கன்னு சொன்னியம்மா.. ஆனா இப்போ என்ன ஆச்சு பாரு.

என் சொந்த குடும்பத்தை ஜெயிலுக்கு ஏத்துன பிறகு அவங்க இனி ஏத்துக்கவாங்கலா? என்று அழுது கொண்டிருக்க, அதற்கு பாக்கியம் நம்ம அந்த குடும்பத்தை ரொம்ப குறைத்து மதிப்பீட்டுடோம் ஆனா அவங்க இவ்வளவு தூரம் எல்லா ஆதாரத்தையும் கொண்டுட்டு வருவாங்க என்று நினைக்கல என்று சொல்கிறார்.
அப்போது மயிலுடைய அப்பா, பாக்கியத்திடம் நகையை எதுக்காக கேட்ட என்று கேட்க நாம கொடுத்த என்பது பவுனுல எட்டு பவுன் தங்க நகை இருக்கு. அதெல்லாம் அங்கே இருக்கிறது சரி கிடையாது, அதோடு அதை வச்சு தான் நாம கேஸ் நடத்த முடியும் என்று சொல்கிறார். ஆனாலும் மயில் அழுது கொண்டே இருக்க, உன் தாலியை அடகு வச்சு தான் இந்த கேசையே நடத்தி இருக்கிறேன். உனக்காகத்தான் இவ்வளவு ரிஸ்க் எடுத்து இருக்கிறேன் அதை புரிஞ்சுக்கோ மயிலு என்று பாக்கியம் சமாதானம் செய்கிறார்.
மறுபக்கத்தில் சரவணனிடம் கோமதி அழுது கொண்டிருக்கிறார். அப்போது பழனி வருகிறார். பழனியை பார்த்ததும் என்னை அக்கான்னு கூப்பிட்ட உன்னை நான் வீட்டை விட்டு வெளியே போனு சொல்லிட்டேன்... என்ன மன்னிச்சிருடா என்று சொன்னதும் பழனி பெருந்தன்மையாக பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு பாண்டியனிடமும் கடை விஷயத்திற்காக மன்னிப்பு கேட்கிறார்.
அப்போது பாண்டியன் உன் நல்ல மனசுக்கு நீ எப்பவும் நல்லா இருப்ப, நாங்க தான் உன்னை புரிஞ்சுக்காம போயிட்டோமே என்று அவரும் பீல் பண்ணி பேசுகிறார். மறுபக்கத்தில் சக்திவேலும் முத்து மேலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு காந்திமதி வருகிறார். அவரை பார்த்தது என்னம்மா ரொம்ப சந்தோஷமா இருக்க என்று கேட்க, அதற்கு காந்திமதி ஜென்ம பகை என்று சொன்னாலும் உங்க தங்கச்சிக்கு ஒன்னுன்னு சொன்ன உடனே நீங்க ஓடுனீங்களே அது போதும்டா என்று சொல்கிறார்.
அதற்கு முத்துவேல் என்ன இருந்தாலும் கோமதி எங்க தங்கச்சி, ராஜி இந்த வீட்டு வாரிசு அவங்களை ஜெயிலுக்குள்ள அனுப்பும்போது எப்படி பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்? ஆனா அதற்காக பகை எல்லாம் தீர்ந்து போச்சுன்னு அர்த்தம் இல்ல என்று சொன்னதும், சக்திவேல் அப்படி சொல்லுங்கண்ணே நாளைக்கே போய் அந்த பரதேசியை மச்சான்னு சொல்ல மாட்டேன் என்று சொல்கிறார்.
கடைசியாக செந்திலும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நீ (மயில் குடும்பத்தை) அவங்கள பார்க்க போனப்ப கேஸ் கொடுக்கப் போறேன்னு சொல்லலையா என்று விசாரிக்கிறார். அதற்கு மீனா அதெல்லாம் எதுவும் சொல்லல என்று சொல்ல, நீதான் அவங்களுக்கு இந்த ஐடியா கொடுத்து குடும்பமா உள்ள தூக்கி வைத்தா வலிக்க வருவாங்கன்னு நினைச்சியா என்று விசாரிக்கிறார்.
இதனால் மீனா அதிர்ச்சியாகி, என்னங்க நம்ம குடும்பத்துக்கு நானே துரோகம் பண்ணுவேனா? என்று கேட்கிறார். அதற்கு செந்தில் அண்ணனுக்கு சீக்கிரமாக டைவர்ஸ் கிடைக்கட்டும் நானே என் அண்ணனுக்கு வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு











Click it and Unblock the Notifications