பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: லஞ்சம் வாங்கிய செந்தில், மறக்க முடியாத சம்பவம்! பயத்தில் கதிர்.. மீனா கண்டுபிடித்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 மார்ச் 11ஆம் தேதிக்கான எபிசோடில், லஞ்சம் வாங்கிய செந்தில் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருடைய மாமனார் மோசமான ஐடியாவை தொடர்ந்து கொடுக்கிறார். மறுபக்கத்தில் ராஜியால் கதிரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் (Pandian Stores 2 Serial March 11, 2026 episode) செந்தில் அரசு வேலை செய்து கொண்டிருப்பவர். ஆனால் அவர் மிகவும் நேர்மையாக வேலை பார்த்து வருவதால் அவரால் அதிகமாக பணம் சம்பாதிக்க முடியவில்லை. இதனால் அவரது மாமனார் அடிக்கடி அவரிடம் "அரசு வேலை பார்த்து முன்னேறணும்னா லஞ்சம் வாங்கணும், இல்லனா எதுவும் நடக்காது" என்று தூண்டி விடுகிறார். ஆரம்பத்தில் செந்தில் அதை ஏற்காமல் இருந்தாலும், தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்ததால் ஒருகட்டத்தில் அவர் மனம் மாறுகிறது.

அதற்குப் பிறகு தனக்கு தெரிந்த ஒரு நபருக்கு ஒரு டாக்குமெண்டில் சீக்கிரமாக கையெழுத்து வாங்கி கொடுத்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று மாமனார் சொல்லுகிறார். அந்த பேச்சை நம்பி செந்திலும் முதல்முறையாக லஞ்சம் வாங்கி விடுகிறார். இதுவரை நேர்மையாக இருந்த செந்தில் இப்படிச் செய்ததால் அவருக்கே உள்ளுக்குள் மிகவும் பயமாக இருக்கிறது.
லஞ்சம் வாங்கிய பிறகு செந்திலின் கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பிக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் பதட்டமாக இருக்கிறார். அப்படியே கலங்கி நின்று கொண்டிருக்கும்போது மீனாவின் அப்பாவிடம் இருந்து அவருக்கு போன் வருகிறது. "எல்லாம் முடிஞ்சிருச்சா? நான் சொல்லி வச்ச ஆள் வந்து பணம் கொடுத்துட்டாரா?" என்று அவர் கேட்கிறார். அதற்கு செந்தில் பணம் வாங்கிய விஷயத்தை சொல்ல, அவர் மிகவும் சந்தோஷப்படுகிறார். ஆனால் அந்த பதற்றம் மட்டும் செந்திலிடம் இருந்து குறையவே இல்லை.
மீனா கேட்ட கேள்வி
அதே பதற்றத்துடன் நடுங்கிக் கொண்டே செந்தில் வீட்டுக்கு திரும்புகிறார். வீட்டுக்கு வந்தவுடன் அவரைப் பார்த்த மீனாவுக்கு ஏதோ சந்தேகம் வருகிறது. "என்னங்க, எதையோ திருடிட்டு வர்ற மாதிரி இப்படி வேர்த்து விறுவிறுத்து வர்றீங்க?" என்று மீனா கேட்கிறார். அதற்கு செந்தில் என்ன சொல்லுவது என்று தெரியாமல் திணறி நிற்கிறார்.
மாமனார் அட்வைஸ்
அந்த நேரத்தில் மீனாவின் அம்மாவும் அப்பாவும் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களை பார்த்த பிறகு செந்தில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பிக்கிறார். அதற்குப் பிறகு மீனாவின் அப்பா செந்திலிடம் "இப்படித்தான் பணம் சம்பாதிக்கணும்" என்று புத்திமதி சொல்ல ஆரம்பிக்கிறார். இதை கேட்கும் போது செந்திலுக்கு உள்ளுக்குள் இன்னும் கலக்கம் தான்.
அது மட்டும் இல்லாமல், மீனாவின் அப்பா தொடர்ந்து செந்திலிடம் "இது போதாது... இன்னும் இப்படித்தான் பணம் சம்பாதிக்கணும்" என்று சொல்லி தொடர்ந்து லஞ்சம் வாங்கச் சொல்லி தூண்டுகிறார். இதனால் செந்தில் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி அடுத்த எபிசோடுகளில் முக்கியமாக இருக்கும் போல தெரிகிறது.
இதற்கிடையில் மற்றொரு பக்கம் ராஜியின் காட்சிகளும் வருகிறது. ராஜி ஐஏஎஸ் தேர்வுக்காக மிகவும் தீவிரமாக படித்து வருகிறார். அதற்காக அவர் இரவு பகலாகவே படிப்பதில் முழு கவனம் செலுத்துகிறார். ஆனால் அவருடைய அறையிலேயே கதிர் தூங்கிக் கொண்டிருக்கிறார். கதிரை டிஸ்டர்ப் செய்யக்கூடாது என்று நினைத்த ராஜி, ரூம் லைட்டை கூட போடாமல் மொபைல் போனின் வெளிச்சத்தில் தான் படித்து கொண்டு இருக்கிறார்.
பயத்தில் கதிர்
அப்படி இரவு நேரத்தில் மொபைல் வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென கதிர் தூக்கத்தில் இருந்து எழுந்து கண் திறந்து பார்க்கிறார். இருட்டில் ராஜி நின்றிருப்பதை பார்த்ததும் அவர் பயந்து "அய்யய்யோ பேய்!" என்று கத்தி விடுகிறார்.
அதற்குப் பிறகு ராஜி உடனே லைட்டை போட்டு "நான் தான்... பயப்படாதீங்க" என்று சொல்கிறார். அப்போது தான் கதிருக்கு புரிகிறது. அதற்குப் பிறகு கதிர் ராஜியை பார்த்து, "அடேங்கப்பா... இந்த அளவுக்கு படிக்கிறியா? என்னால உன்னோட படிப்பு கெட்டுப் போகக்கூடாது. நீ லைட்டை போட்டுக்கிட்டு நிம்மதியா படி" என்று சொல்கிறார். அதற்குப் பிறகு ராஜியும் லைட்டை போட்டுக்கொண்டு இரவு முழுவதும் விடிய விடிய படித்துக் கொண்டே இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications