பாண்டியன் ஸ்டோர்ஸ்: நெஞ்சு வலியில் துடித்த கோமதி.. அதிர்ச்சி கொடுத்த பாண்டியன்.. மீனா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial Today Episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 பிப்ரவரி 7ஆம் தேதிக்கான எபிசோடு, கோபமாக இருக்கும் பாண்டியன் மனதை மாற்றுவதற்காக கோமதி எடுத்த முடிவு அவருக்கே பிரச்சனையாக வருகிறது. அதே நேரத்தில் இதுவரைக்கும் கோபமாக இருந்த செந்தில் இப்போது அவரை புரிந்து இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் (Pandian Stores 2 serial Today Episode Update (Feb 7, 2026)) கோமதி மறுபடியும் டிராமா போட ஆரம்பித்திருக்கிறார். தன்னால மூச்சே விட முடியலனு சொல்லி நடிக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் பாண்டியன் அமைதியாக அமர்ந்திருக்கிறார். சத்தம் கேட்டு பக்கத்து ரூமில் தூங்கிக் கொண்டிருந்த சரவணன் எழுந்து வந்து பார்க்கிறார். ஆனால் பாண்டியன் அமைதியாக கோமதியை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

பதறிய சரவணன்
அப்போது சரவணன், அப்பா பாருப்பா அம்மாவால முடியல, ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போகலாம்னு சொல்கிறார். அதற்கு பாண்டியன், டேய் உன் அம்மா பயங்கரமா நடிச்சிட்டு இருக்காடானு சொல்லுகிறார். அவகூட சேர்ந்து என்னையும் நடிக்க சொல்லுறியா என்று கேட்கும் பாண்டியன், ரூமில் இருந்து பாயை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றுவிடுகிறார்.
கோபத்தில் கோமதி
உடனே கோமதி எழுந்து, என்ன நான் நடிக்குறேன்னு சொல்றீங்களா... எனக்கு உண்மையாவே மூச்சு விட முடியலனு சொல்லி கோபமாக பேசுகிறார். சரி, இப்போ என்கூட சண்டை போடும் போது மட்டும் உனக்கு நல்லா மூச்சு விட முடியுதே என்று பாண்டியன் கேட்டபின்னர் தான், அம்மா நடிக்கிறாங்க என்ற உண்மை அரசிக்கும், சரவணனுக்கும் தெரிய வருகிறது. அதன்பின்னர் பாண்டியன் ஹாலில் சென்று படுத்துக் கொள்கிறார்.
கதிர் ராஜி ரொமான்ஸ்
மறுபுறம் சென்னை சென்றிருக்கும் ராஜி, இரவு முழுக்க கதிர் உடன் ரொமான்ஸ் செய்துவிட்டு டயர்டாகி நன்கு தூங்கிவிடுகிறார். அவர் எழுந்த உடனே கதிர் காஃபி ரெடியாக வைத்திருக்கிறார். ராஜியும் பிரஸ் அப் ஆகிவிட்டு வருகிறார். அதன்பின் கதிரிடம் பேசும் ராஜி, எனக்கு இங்கயே இருக்கலாம்னு தோணுது என சொல்கிறார். அதற்கு கதிர், நம்ம வந்ததே கோச்சிங்கிற்காக தான், நீ அதை மட்டும் பாரு என சொல்லிவிடுகிறார். பின்னர் ராஜியின் விருப்பத்திற்கு ஏற்ப பிளான் போடும் கதிர், வேண்டுமென்றால் இன்று இரவு இங்கேயே தங்கிட்டு நாளைக்கு கிளம்புவோம் என ஐடியா கொடுக்கிறார்.
அதிர்ச்சி கொடுத்த பாண்டியன்
வீட்டில் கோமதி காலை எழுந்து சமையல் வேலைகளை முடித்திருக்கிறார். காலையில் பாண்டியன் சாப்பிட வருகிறார். அப்போது அங்கிருந்த அரசியை, மொட்டை மாடிக்கு போய் துணி எடுத்துட்டு வா என அனுப்பிவிடுகிறார் கோமதி. தன் கையாலேயே பாண்டியனுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என பிளான் போட்டு கோமதி இப்படி செய்ய, பாண்டியனோ நான் வெளியவே சாப்பிட்டுக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
இதையெல்லாம் பார்க்கும் சரவணன், நீ அப்பா பின்னாடியே போகாத, கொஞ்ச நாள் அமைதியா இரு, அவரே உன்கிட்ட பேசுவாரு என சொல்கிறார். கோமதியும் அந்த பிளானுக்கு ஓகே சொல்கிறார். மறுபுறம் செந்தில், மீனா பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்துகொண்ட நிலையில், அவரிடம் சென்று நீ என்கிட்டயாச்சும் இந்த உண்மையை சொல்லிருக்கலாம்ல என கூறுகிறார்.
மனம் மாறும் செந்தில்
எனக்கு உன்மேல கோபமெல்லாம் இல்லை, வருத்தம் தான். நீ என்கிட்ட கூட சொல்லவே இல்லேல, நான் உன் புருஷன் தானா என்று செந்தில் கேட்க, அதற்கு பதிலளிக்கும் மீனா, இந்த விஷயத்தை நான் உங்ககிட்ட சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும். ஏற்கனவே மாமா என்னைய திட்டிகிட்டு இருக்காரு. இதில் நீங்களும் உடந்தையாக இருந்தீங்கன்னு தெரிஞ்சா உங்களை அடிச்சிருக்க மாட்டாரா என்று மீனா கேட்கிறார். அப்போதுதான் நடந்த விஷயத்தின் உண்மை செந்திலுக்கு புரிய வருகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications