முதலில் உங்க வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மரியாதை கொடுங்க.. விஜய்க்கு குட்டு வைத்த பரிதாபங்கள் டீம்!
சென்னை: நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து விவகாரம் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. அதற்கு மேலாக நடிகை திரிஷா உடன் விஜய் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இந்த சர்ச்சையை மேலும் பெரிதாக்கியது. இந்த நிலையில் விஜய் மகளிர் தின கொண்டாட்டத்தின் போது பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பரிதாபங்கள் கோபி சுதாகர் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

26 ஆண்டுகள் வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து
விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட சங்கீதா, சுமார் 26 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருக்கிறார். இந்த தகவல் வெளிவந்ததும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதிலும் சங்கீதா தனது மனுவில் வைத்திருந்த சில குற்றச்சாட்டுகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தின. அவர் கூறிய விஷயங்கள் உண்மையா என்ற சந்தேகம் எழும் வகையில் பின்னர் விஜய்யின் சில செயல்பாடுகளும் அமைந்ததாக பலர் கூறி வருகின்றனர்.
திரிஷாவுடன் விஜய் வருகை - புதிய சர்ச்சை
இதே நேரத்தில் நடிகை திரிஷா உடன் விஜய் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்தது இந்த விவகாரத்தை இன்னும் அதிகமாக பேசப்படும் விஷயமாக மாற்றியது. யாரும் எதிர்பார்க்காத விதமாக அவர்கள் இருவரும் ஒன்றாக வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களிலும் கூட பல கேள்விகள் எழ ஆரம்பித்தன.
இதனால் ஏற்கனவே இருந்த சர்ச்சை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் மேலும் பெரிதானது.
சங்கீதாவின் இரண்டாவது மனு
இதற்கிடையில் சங்கீதா தாக்கல் செய்த இரண்டாவது மனுவும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மனுவில் அவர் கூறியிருப்பது:
"நான் பிரிட்டன் நாட்டின் பிரஜை. இங்கே தங்குவதற்கு எனக்கு தனியாக வீடு இல்லை. விஜய் தனது நீலாங்கரை வீட்டில் என்னை தங்க அனுமதிக்க மறுக்கிறார். எனவே அந்த வீட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கும்படி உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த தகவல் வெளியானதும் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தன்னுடன் குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகளை பெற்ற மனைவியையே வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் விஜய் மீது அதிருப்தி மேலும் அதிகரித்தது.
விஜய்யின் அலட்சிய பேச்சு
இந்த விவகாரம் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சமீபத்தில் நடந்த கட்சியின் மகளிர் அணிக் கூட்டத்தில் விஜய் பேசிய சில வார்த்தைகளும் சர்ச்சையை ஏற்படுத்தின. அப்போது அவர், "இப்போது ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சனைக்காக நீங்கள் போராடி மனம் புண்படுவதை பார்த்தால் எனக்கும் வருத்தமாக இருக்கிறது. அதை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கெல்லாம் அவ்வளவு வொர்த்தே இல்லை" என்ற வகையில் பேசினார்.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகியதும் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
பரிதாபங்கள் குழுவின் வீடியோ
இந்த சூழ்நிலையில் சோசியல் மீடியா பிரபலங்களான பரிதாபங்கள் (Parithabangal) குழுவை சேர்ந்த கோபி சுதாகர் (Gopi Sudhakar) புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் சுதாகர் பெண்கள் தின வாழ்த்து கூறுவது போல ஒரு காட்சி வருகிறது. அதற்கு கோபி பதில் சொல்லும் விதமாக, "உங்கள் வீட்டிலேயே யாரும் இல்லை. மனைவி சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு போய்விடுவார். அம்மாவும் தங்கச்சி வீட்டுக்கு போய்விடுவார்.
நீங்கள் பெண்கள் சமத்துவம் பற்றி பேசுவீர்களா? வாழ்க்கையில் அதுபோல எதையும் செய்யவில்லை. பேச்சில் மட்டும் பெண்களை பற்றி பேசுகிறீர்கள். பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் முதலில் உங்கள் வீட்டிலிருந்து தொடங்குங்கள். அதன் பிறகு நாட்டுக்கு செய்யலாம். விளம்பரத்துக்காக இதையெல்லாம் செய்கிறீர்களா?" என்று கேட்கும் விதமாக அந்த காட்சி அமைந்துள்ளது.
விஜய்யை குறிவைத்த வீடியோ
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர், "இந்த வீடியோவில் நேரடியாக பெயரை சொல்லவில்லை. ஆனால் தற்போது நடக்கும் விஜய் - சங்கீதா சர்ச்சையை குறிவைத்துதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறி வருகின்றனர்.
மேலும் சிலர், விஜய் பெயரை நேரடியாக சொன்னால் அவரது ரசிகர்கள் திட்டுவார்கள் என்று இப்படி பெயரை சொல்லாமல் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொடரும் சர்ச்சை
இவ்வாறு விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம், திரிஷாவுடன் விஜய் வந்த நிகழ்ச்சி, சங்கீதாவின் இரண்டாவது மனு, அதற்கு மேலாக பரிதாபங்கள் கோபி - சுதாகர் வெளியிட்ட வீடியோ ஆகியவை ஒன்றாக இணைந்து தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளன.
-
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications