கண்ணாடி புடவையில் கலக்கும் ஜூலி..உடைந்து போனது ரசிகர்களின் மனது
சென்னை: கண்ணாடி புடவையில் போட்டோசூட் எடுத்திருக்கும் ஜூலியை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் கலகலத்துப் போய் இருக்கிறார்கள்.
இடுப்பில் கை வைத்தபடி கலக்கலான மாஸ் பார்வையில் மிரட்டும் ஜூலியை பார்த்ததும் ரசிகர்களின் மனது மிரண்டுபோனதாம்.
எத்தனை நாளாச்சு இந்த மாதிரி பார்த்து என்று ஜூலியை பார்த்ததும் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.

புடவை ஜொலிக்குதே
ஜிகுஜிகுவென இருக்கும் ஊதா கலர் புடவையில் அசத்தும் அழகை எடுப்பாய் காட்டியிருக்கும் ஜூலியை பார்த்ததும் இன்ஸ்டாகிராமில் அவருடைய ரசிகர்கள் எல்லாம் கமெண்ட் பாக்ஸ்க்கு ஓடி வந்துவிட்டனர். இப்படியே எத்தனை முறைதான் பார்த்துக் கொண்டிருப்பது என்று சிலர் பார்வையை கொஞ்சம் வேற பக்கம் திருப்புங்கள் என செல்லமாக கலாய்த்து வருகின்றனர்.

அடடா என்ன அழகு
கண்ணாடி புடவையில் மெல்லிடையை லாவகமாக காட்டி போட்டோ சூட்டை ஆரம்பித்திருக்கும் ஜூலியை பார்த்ததும் ரசிகர்களின் மனது சுக்குநூறாக உடைந்து போய்விட்டதாம். அடடா என்ன அழகு!!என்று ஆர்ப்பரித்து வருகின்றனர்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரைக்கும் இவரைப் பற்றி பல நெகட்டிவ் கமெண்டுகள் வலம் வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது அது எல்லாம் குறையத் தொடங்கிவிட்டது. அது இவருடைய வெற்றிதான்.

மீண்டும் விஜய் டிவியில்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஜூலி அந்த திரைப்படங்கள் இன்னும் வெளியாகாததால் போட்டோ சூட்டில் காலடி எடுத்து வைத்தார். மாடலிங் போட்டோ சூட்டில் மாடர்ன் உடை முதல் ட்ரெடிஷனல் உடை வரை விதவிதமாக தனது அழகை வெளிக்காட்டி கொண்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் தனது நடனத் திறமையை வெளிக்காட்டி கொண்டிருந்தார். இவர்தான் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை
ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றாலும், பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுவிட்டார். எவ்வளவு நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் அதற்கு சிரித்த முகமாக இவர் பதில் அளிப்பதை பார்த்து பலர் காண்டாகி கொண்டிருந்தாலும், சிலர் அப்படியே விட்டு விட ஆரம்பித்து விட்டனர். அதனாலேயே இவருக்கு இப்போது அதிகமாக ரசிகர்கள் உருவாக தொடங்கிவிட்டனர். மீண்டும் இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ சூட்டை தொடங்கியிருக்கும் நிலையில் தற்போது புடவையில் எடுத்திருக்கும் போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது.

மீண்டும் போட்டோஷூட்
ஒரு போட்டோ சூட்டில் ஒரே புடவையில் எடுத்த விதவிதமான போட்டோக்களை ஒரு சில நாட்களாக இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அதில் இடுப்பில் கைவைத்து இருக்கும் போட்டோஸ்கள் வேற லெவலில் ரீச் ஆகிவிட்டது. மற்றொரு போஸ்டில் ஒரு வீட்டிற்குள் இருந்து இவர் வெளியே வருவது போல ஒரு போட்டோ இருக்கும், இந்த போட்டோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்படியோ பல நாட்களுக்கு பிறகு மீண்டும் வைரலாக தொடங்கியிருக்கும் ஜூலிக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு











Click it and Unblock the Notifications