விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ்
சென்னை: நடிகர் விஜய் மற்றும் அவரது நெருங்கிய நண்பரான சஞ்சீவ் குறித்து பல ஆண்டுகளாக பரவி வரும் வதந்திகள் மற்றும் ட்ரோல்கள் குறித்து, சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி சஞ்சீவ் சமீபத்திய பேட்டியில் விரிவாக பேசியுள்ளார். இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.

விஜயின் நண்பர் சஞ்சீவ்
பேட்டியில் ப்ரீத்தி கூறியதாவது, தனது கணவர் சஞ்சீவ் மற்றும் விஜய் இருவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும், சஞ்சீவ் பொதுவெளியில் விஜய் குறித்து பேசும் போது சமூக வலைதளங்களில் ட்ரோல்கள் அதிகமாக வருகின்றன. "அவர் விஜயை பின்பற்றுகிறார், அவரைப் போல நடிக்கிறார்" போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் இத்தகைய விமர்சனங்களை கவனித்து இருக்கிறேன் ஆனால் இப்போ எல்லாம் அதை கண்டுக்கிறதே இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
உண்மை இதுதானா?
மேலும், சஞ்சீவ் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை என்றும், அவரது சோசியல் மீடியா அக்கவுண்டில் முக்கியமான பதிவுகளை நான்தான் போஸ்ட் போடுகிறேன் என்று கூறினார். இதனால், சமூக வலைதளங்களில் வரும் நெகட்டிவ் கருத்துக்கள் அவரை நேரடியாக பாதிக்கவில்லை என்றும், அவற்றை தானே பார்த்து வருவதாகவும் விளக்கினார். உண்மை நிலை தெரியாமல் சிலர் தவறாக விமர்சிப்பது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார்.
விஜய் சஞ்சீவ் இணைந்து நடித்த படங்கள்
நடிகர் விஜய் மற்றும் சஞ்சீவ் இடையேயான நட்பு தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் இணைந்து நடித்த பத்ரி மற்றும் மாஸ்டர் போன்ற பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தனது தொழில்வாழ்க்கை குறித்து பேசும்போது, ப்ரீத்தி சஞ்சீவ் பல ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருவதாகவும், தற்போது மூன்று முடிச்சு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருவதாகவும் தெரிவித்தார். குடும்பங்களில் சீரியல்கள் எவ்வாறு இயல்பாக இடம்பிடிக்கின்றன என்பதையும் சிரிப்புடன் பகிர்ந்தார்.
சீரியல் அனுபவம்
அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ஆரம்பத்தில் தமக்கு அரசியல் குறித்து அதிக புரிதல் இல்லை என்றும், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு தான் அதைப் பற்றி அறிந்து கொள்ள தொடங்கியதாகவும் ப்ரீத்தி கூறினார். மேலும், தற்போது அரசியலில் செயல்பட்டு வரும் விஜய் குறித்து பேசும்போது, அவர் எந்த உயரத்திற்குப் போனாலும், தங்களுடைய உறவு மாற்றமில்லை என்றும், ரசிகர்களைப் போல மரியாதை கொண்ட உறவாகவே தொடரும் என்றும் பேசி இருக்கிறார் .
மொத்தத்தில், சஞ்சீவ் - விஜய் நட்பு குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ப்ரீத்தி சஞ்சீவ் அளித்த இந்த பேட்டி அமைந்துள்ளது.
-
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த்












Click it and Unblock the Notifications