For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புகழ் மாதிரி ஆட்களை தட்டி வைக்கலாமே..ஓவரா...!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளி புகழின் அட்டகாசம் நாளுக்கு நாள் கூடிகிட்டே போகுது.

நடிகை ரம்யா பாண்டியனுடன் இவர் அடிக்கும் லூட்டிக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.

பாவம் ரம்யா பாண்டியன்.. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்.. இதை எல்லாம் கண்டிக்க கூடாதா?

 குக்கு வித் கோமாளி

குக்கு வித் கோமாளி

குக்கரி ஷோ என்று ஆரம்பித்து, ஒரு நல்ல காமெடி ஷோ என்கிற அளவுக்கு விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி விரும்பிப் பார்க்கும் அளவுக்கு இருக்கிறது. உமா ரியாஸ், வனிதா விஜயகுமார், நடிகை ரேகா போன்றவர்கள் நல்ல சமையல் கலைஞர்களாக இருந்தும், கோமாளிகளிடம் மாட்டிக்கொண்டு இவர்கள் திணறும் திணறல்தான் நிகழ்ச்சியின் ஹைலைட்.

 வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார் கோமாளிகளிடம் அவ்வளவாக டென்சன் ஆகாமல் தனது வேலையை சரியாக செய்து முடிக்கிறார். சரியான நேரத்தில் நல்ல ஐடியா செய்து சமையலை நன்றாக செய்து முடிக்கிறார். பிக் பாஸுக்குப் பிறகு இவருக்கு நல்ல புகழை இந்த ஷோ கொடுத்து இருப்பது உண்மைதான்.

 காமெடி குக்கரி

காமெடி குக்கரி

குக்கரி ஷோவில் ஒரு காமெடியை புகுத்துவதை நன்றாகவே செய்து, அப்போது எதிர்பாராமல் வரும் காமெடியை வைத்து, நன்றாக சிரிக்க வைத்து இருக்கிறார்கள். இன்னும் என்றும் இந்த காமெடிக்கு எண்ட் இல்லாத மாதிரி இந்த நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறது.

 கட்டுப்பாடு தேவை

கட்டுப்பாடு தேவை


நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையல் செய்து வரும் நடிகை ரம்யா பாண்டியனை குக்கு வித் கோமாளியின் புகழ் ரொம்பவே ஓட்டுகிறார். ஜோடிப் பொருத்தம் என்பதும்.. இந்த பேர் என்று வழிவதும்.. இவருக்குத்தான் நான் கோமாளியாக போவேன் என்று அடம் பிடிப்பதும்.. சீ என்று இருக்கிறது.

நடுவில் நிகழ்சசித் தொகுப்பாளர் ரக்க்ஷன் வேறு வந்து வந்து ஜொள்ளு விடுகிறார். இதெல்லாம் ஷோவின் தரத்தை இழக்கச் செய்து விடுகிறது. ஏதோ ஒரு முறை இரண்டு முறை என்றால் பரவாயில்லை. ரம்யாவை பார்க்கும்போதெல்லாம் ஜொள்ளு விட்டால் பார்க்க நன்றாகவா இருக்கிறது.

ஷோ பண்ண வந்தீர்களா? ஜொள்ளு விட வந்தீர்களா? மக்கள் நிகழ்ச்சியைத்தான் பார்க்கிறார்கள்.. நீங்கள் ஜொள்ளு விடுவதை அல்ல..!

English summary
Vijay TV'scook With Clown show will go on for a while. Lutti's boundary with actress Ramya Pandian is gone. Poor Ramya Pandian .. Can't say and not push .. Can't condemn all this?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X