டைவர்ஸ் ஆகாத ஆணோடு ஒரே கலரில் டிரஸ் அணிந்து சென்றால்.. விளாசிய ஆர்த்தி ரவி! அடுத்த பஞ்சாயத்து
சென்னை: தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். பல வெற்றிப் படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், கடந்த சில மாதங்களாக தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.

காதல் திருமணம்
ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரைப்பட தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி, திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
பல ஆண்டுகள் அமைதியாக குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த இவர்களுக்குள் பின்னர் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் ரவி மோகன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
பெயரை நீக்காத ஆர்த்தி
இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றாலும், ஆர்த்தி தனது சமூக வலைதளங்களில் இன்னும் ரவி மோகனின் பெயரை நீக்காமல் வைத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் "இவர்களுக்குள் மீண்டும் சமரசம் ஏற்படுமா?" என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் அடிக்கடி எழுந்து வருகிறது.
கெனிஷாவுடன் வந்த சம்பவம் சர்ச்சை
இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டில் நடைபெற்ற ஒரு விழாவில் ரவி மோகன், பாடகியும் கலைஞருமான கெனிஷா (Kenishaa Francis) உடன் கலந்து கொண்டார். இருவரும் ஒரே நிற ஆடையில் ஜோடியாக வந்தது பெரும் பேசுபொருளாக மாறியது.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் பல இடங்களில் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இதனால் ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு ஊகங்களில், விமர்சனங்களும் எழுந்தன. அதேபோல ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரையை போல சமீபத்தில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒரே கலரில் உடை அணிந்து ஒரு கல்யாண ஃபங்ஷனில் கலந்து கொண்டனர். இதனால் இதற்கு முன்னாடி ரவிமோகன் தான் என்று பலரும் விமர்சித்து வந்தனர்.
ரவி மோகன் ஆதங்கம்
இந்த விவகாரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரவி மோகன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில்,
அதிகமாக பாதிக்கப்படுவது ஆண்கள்தான் ஒரு நாள் உங்களுக்கு என்னை புரியும்... தயவு செய்து என்னை வாழ விடுங்கள்
என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ வைரலானதுடன், பல ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக, "சார் தயவு செய்து குடும்பத்துடன் சேர்ந்து வாழுங்கள். உங்கள் மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகள்தான் கடைசிவரை உங்களுடன் இருப்பார்கள்" என்று பலரும் கருத்து பதிவு செய்திருந்தனர்.
ஆர்த்தியின் மறைமுக பதில்
இதற்கிடையில் ஆர்த்தியும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், "நேர்மைக்காக குரல் கொடுப்பவர்களுக்கு நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் பகிர்ந்திருந்த அந்த பதிவில், "விவாகரத்து உறுதியாவதற்கு முன்பு ஆர்த்தி ஒரு ஆணுடன் ஒரே கலரில் உடை அணிந்து வெளியே சென்றால் உலகம் அமைதியாக இருக்குமா? அதை எல்லாம் செய்த பிறகு பெண்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொன்னால் ஏற்க முடியுமா? அப்படி செய்துவிட்டு பாதிக்கப்பட்டவன் என்று சொல்லும் ஆண்களை நாங்களும் கை காட்டுவோம். இது கொடூரமான செய்கை." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரசிகர்களின் கவலை
ரவி மோகன் - ஆர்த்தி தம்பதியரின் இந்த பிரச்சனை ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து குடும்ப வாழ்க்கையை தொடர வேண்டும் என்றே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், சிலர் ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த விவாகரத்து வழக்கு மற்றும் இருவரின் உறவு குறித்து அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக்












Click it and Unblock the Notifications