ருத்ரன் திரைப்படத்தில் சரத்குமாரின் புது கெட்டப்...வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தில் சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கதாநாயகனாகவும் அதிரடி நாயகனாகவும் பார்த்து வந்த சரத்குமாரின் லேட்டஸ்ட் போட்டோ தான் இளைஞர்களை கவர்ந்துள்ளது.
ருத்ரன் திரைப்படத்தின் போஸ்டர் பார்த்ததும் சரத்குமாரின் ரசிகர்கள் அதிருப்த்தியில் உள்ளனர்.

சரத்குமாரின் லேட்டஸ்ட் லுக்
இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து அடுத்த வருடம் வெளிவர இருக்கும்"ருத்ரன்" திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரத்குமார் அவர்களின் 'லுக்' வெளியாகி அவரது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வந்தாலும் சிறிய மனவருத்தத்தை அளித்துள்ளதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தொடங்கிய சூட்டிங்
பொல்லாதவன்,ஆடுகளம், ஜிகர்தண்டா, போன்ற மிகப்பெரிய வெற்றிப் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் ராகவா லாரன்ஸ் வைத்து கதிரேசன் இயக்கத்தில் "ருத்ரன்" என்ற படத்தை ஆரம்பித்தது. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர், இசையமைப்பாளராக ஜிவி.பிரகாஷ் என்று பெரிய டெக்னிசியன்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஜனவரி மாதம் படத்தின் பூஜை போட்டு சூட்டிங் ஆரம்பித்தது. இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த சூழ்நிலையில் இரண்டாம் கட்ட ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் படத்தின் ஷூட்டிங் தடைபட்டது.

சரத்குமாரின் கெட்டப்
படத்தின் ஷுட்டிங் நடைபெறவில்லையே தவிர மற்றபடி கதாநாயகன் லாரன்ஸ், கதாநாயகி பிரியா பவானி சங்கர் போன்றோர் வேறு வேறு படங்களில் ஒப்பந்தமாகி வந்தனர். தற்பொழுது படப்பிடிப்பிற்கு தளர்வுகள் கொடுத்துள்ள நிலையில் வேகமாக படப்பிடிப்பை முடித்து அடுத்த வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டன்று இப்படத்தை கொண்டு வரும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சிறிது நாட்களுக்கு முன்பு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு தற்பொழுது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரத்குமாரின் 'லுக்'கை வெளியிட்டுள்ளது.

ரசிகர்களுக்கு வருத்தம்
தற்பொழுது இந்த 'லுக்' போஸ்டர் தான் சரத்குமார் ரசிகர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக இணையத்தில் கருத்துக்கள் உலா வருகிறது. சரத்குமாரின் கெட்டப் செம மிரட்டலாக இருந்தாலும், ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் காண மரியாதையை படக்குழு தரவில்லை என்று ரசிகர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினி, கமல் போன்ற நட்சத்திரங்கள் உச்சத்திலிருந்த காலத்திலே பல முன்னணி இயக்குனர்களின் சாய்ஸாக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் சரத்குமார்.அவரது லுக் வெளியீட்டு போஸ்டரிலே அவரது பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடாதது மிகவும் வருந்தத்தக்கது என்று தங்கள் வேதனையை தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications