Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதுகில் இருக்கும் மச்சம்.. முழுசா காட்டி சிரித்த ஸ்ரேயா அஞ்சன்.. ரசிகர்களுக்கு குஷி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அன்புடன் குஷி சீரியலின் குஷியாக ரசிகர்களின் மனதை குஷிப்படுத்தும் ஸ்ரேயா தான் இப்போ இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.

கலர்ஸ் டிவியை விட்டு விஜய் டிவிக்கு வந்த பிறகும் இவர் கலர் கலரா கண்ணைக் கவரும் அழகு குறையலயே என ரசிகர்கள் பெருமூச்சு விடுறாங்க.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் முடியை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் போட்டுக்கிட்டு எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் தட்டிவிட அது இப்போ காட்டு தீ போல கொழுந்து விட்டு எரியுது.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் தரிசனமா

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் தரிசனமா

என்ன அழகுடா சாமி என்று உச்சுக் கொட்டுவது மாதிரி இப்போ அழகின் மறு உருவமாக வந்த ஸ்ரேயா அஞ்சனை பார்த்து விழி அசைக்க மறந்த ரசிகர்கள் அப்படியே போனை எடுத்துப் பார்த்து வருகின்றனர். இவருடைய தெத்துப்பல் சிரிப்புக்கு பலர் அடிமையாக இருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் தற்போது பஞ்சு மிட்டாய் கலரில் ஜாக்கெட்...அதுவும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை போட்டு சேலையை ஒரு மார்க்கமாக கட்டிக்கொண்டு ஸ்டைலாக புன்னகைக்கும் இவரைப் பார்த்து ரசிகர்கள் எதைப் பார்ப்பது எதை விடுவது என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு எல்லாமே எடுப்பாக இருக்கிறதே என்று பீலிங்கை கொட்டுகின்றனர்.

நமக்கு அது தேவை இல்லையே

நமக்கு அது தேவை இல்லையே

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்து சீரியல் ராணியாக வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு சில சீரியல்களில் நடித்து இருந்தாலும் தனக்கென்று பெரும் ரசிகர்கள் பட்டதோடு வலம் வருகிறார் .நமக்கெல்லாம் ஆயிரக்கணக்கில் நடிச்சாத்தான் பேர் வாங்கணும்னு இல்ல ஒரு சீரியலில் வந்தாலும் நம்ம பர்பாமன்ஸ் வேற லெவல் இருக்கும் என இவர் கெத்தாக களமிறங்கி நன்றாகவே செய்தும்விட்டார். இந்த மாதிரி வாய்ப்பு எல்லாம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

அதுக்கு காரணம் அவர்தான்

அதுக்கு காரணம் அவர்தான்

இவர் கன்னட திரைப்படத்தில் தான் ஒரு நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். முதல் திரைப்படத்திலேயே இவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஆனாலும் அதைத் தொடர்ந்து பெரிய அளவில் எந்த வாய்ப்பும் கிடைக்காத நேரத்தில் தான் இவருக்கு தமிழில் இருந்து அரண்மனை என்னும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் சீரியலில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். முதல் சீரியலில் நடிக்கும்போது இவருக்கு தமிழ் கொஞ்சம் கூட தெரியாதாம். ஆனால் திருமணம் சீரியல் முடியும்போது நல்லாவே தமிழ் பேச கற்றுக்கொண்டார்.

அழகான ஜோடி புறாக்கள்

அழகான ஜோடி புறாக்கள்

திருமணம் சீரியலில் இவர் நடிக்கும்போது அதற்கான கதையினை இங்கிலீஷில் கேட்டு எழுதி வைத்து விடுவாராம். அதன்படி வாயை அசைத்து நடித்துவிட்டு டப்பிங் பேசுவதற்கு படாதபாடுபட்டு இருக்கிறார். ஆனால் போகப்போக நல்லாவே தமிழ் கற்றுக் கொண்டாராம். அதற்கு காரணம் அந்த சீரியலில் அவருடன் நடித்த சித்துவும் ஒரு காரணம் என்று கூறியிருக்கிறார். இருவருக்கும் ஜோடிப் பொருத்தத்தை சின்னத்திரை ரசிகர்களிடம் தான் கேட்க வேண்டும். ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜோடிகளாக இவர்கள் தான் வலம் வந்தனர்.

பிறந்தநாளில் அசத்திவிட்டார்

பிறந்தநாளில் அசத்திவிட்டார்

இந்த சீரியலில் இவர்களிருவரும் நடிக்கும்போது பிடித்துப் போன ரசிகர்கள் வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தால் அழகாக இருக்கும் என்று அடிக்கடி சொல்லி சொல்லியே இவர்களுக்குள் காதல் பற்றிக் கொண்டதாம். இந்த சீரியல் முடிவடைந்து இருவரும் வேறு வேறு சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இன்டர்வியூ நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி ,பிரெண்ட்ஸ்களுடன் பார்ட்டியாக இருந்தாலும் சரி இவர்கள் ஒன்றாகத்தான் கலந்து கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சித்துவின் பிறந்தநாளை ஸ்ரேயா அமர்க்களமாக கொண்டாடி தன்னுடைய காதலை நிரூபித்துவிட்டார்.

இளசுகளின் மனசில் ராணி தான்

இளசுகளின் மனசில் ராணி தான்

திருமணம் சீரியலுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குஷி சீரியலில் அன்புடன் குஷி சீரியலில் பிசியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக பிரஜின் நடிக்கிறார். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் நன்றாக ஒர்க் அவுட் ஆனதால் தான் இந்த சீரியலும் டி ஆர் பி யில் முக்கியமான இருந்து வருகிறது. திருமணம் சீரியலில் எப்படி ஜனனியாக வாழ்ந்தாரோ அதுபோலத்தான் இப்போ கூட அன்புடன் குஷியிலும் குஷி ஆகவே வாழ்ந்து வருகிறார். இந்த சீரியலை இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஸனைப் பார்த்து பலரும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களிலும் டீபிகளிலும் இவருடைய போட்டோக்களை வைத்து வருகின்றனர்.

பிடிச்சது இது இல்லைங்க

பிடிச்சது இது இல்லைங்க

சீரியலில் தான் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால் இப்போ இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்துவருகிறார். அதிலும் போட்டோ ஷூட் எடுத்து வேற லெவல் பெர்பார்மன்ஸ் பண்ணி விடுகிறார். மார்டன் உடைகளில் தான் ரொம்ப பிடிக்கும். ஆனால் இவர் நடிக்கும் கேரக்டர் எல்லாமே புடவையிலேயே இருப்பதால் இப்போதும் புடவையில் போட்டோ சூட்டை எடுத்திருக்கிறார். அதுவும் லைட் பிங்க் கலரில் புடவை இருக்கவா இறங்கவா என குழம்பி தவிப்பது போல இருக்கும் நிலையில் ஜாக்கெட்டில் முன்னழகு பின்னழகு என விதவிதமாக போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார்.

செம போஸ்

செம போஸ்

இவர் சீரியலில் வந்தாலே வச்ச கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் வந்தால் விட்டு வைப்பார்களா அப்படியே வர்ணித்து வருகின்றனர். அதுவும் அவருடைய தெத்துப்பல் தெரியும் சிரிப்புக்கு தான் பலருக்கு ஃபேவரைட்டாக இருந்து வருகிறதாம். முழு முதுகும் தெரிகிற மாதிரி பேக் போஸ் காட்டி ஒரு போட்டோ எடுத்திருக்கிறார் .அதில் முதுகில் இருக்கும் சின்ன மச்சத்தை பார்த்த ரசிகர்கள் ரொம்ப அதிர்ஷ்டக்காரி தான் நீங்க என்று ஜோசியமும் சொல்லி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+